அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ | It wasn’t a chicken piece”.. Unbelievable discovery in Kanpur Zomato Biryani parcel? 28 second video goes viral

India

oi-Hema Vandhana

கான்பூர்: பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு, ஆன்லைனில் இளைஞர் ஒருவர் ஆர்டர் செய்தார்.. அந்த பார்சலைத் திறந்து பார்த்த இளைஞர், அந்த இறைச்சித் துண்டைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.. ஒட்டுமொத்த இணையத்தையே அதிர வைத்துள்ள இந்த விசித்திரமான சம்பவத்தின் பின்னணி என்ன? என்ன நடந்தது உத்தர பிரதேச மாநிலத்தில்?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இளைஞர், பிரபல உணவு டெலிவரி செயலியான சொமாட்டோ மூலம் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.. கொஞ்ச நேரத்தில் பார்சல் வீட்டுக்கு வந்தது..

Kanpur Zomato Chicken Biryani Viral Video Food Safety Mystery Meat

சிக்கன் பிரியாணி

அதை திறந்து சாப்பிடத் தொடங்கிய அவருக்கு, அதில் இருந்த ஒரு சிக்கன் பீஸ் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அந்த துண்டு வழக்கமான கோழி அல்லது மட்டன் போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு நாயின் காலை போல அல்லது பாதத்தை போல இருந்துள்ளது..

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர், உடனடியாக தனது செல்போனில் வீடியோவாக அதை பதிவு செய்துள்ளார்.. அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டார்..

28 விநாடிகள் ஓடும் வீடியோ

சுமார் 28 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், பிரியாணி பாத்திரத்தில் இருந்த அந்த வித்தியாசமான இறைச்சி துண்டை கேமராவுக்கு மிக அருகில் காட்டி விளக்குகிறார்..

அந்த இறைச்சி துண்டின் வடிவம் நாயின் கால் போலவே இருப்பதாக ஆவேசமாக இளைஞர் பேசுகிறார்.. மிகுந்த கோபத்துடனும் அருவருப்புடனும் அந்த பீஸை தூக்கி எறிகிறார்.. மேலும், இப்படியொரு தரம் குறைந்த உணவை வழங்கியதற்காக அந்த உணவு டெலிவரி நிறுவனத்தையும் மோசமாக திட்டுகிறார்.. “இதோ பாருங்க மக்களே, இது நாயின் கால் போல இருக்கு.. சிக்கன் பீஸ் கேட்டால் என்ன தந்திருக்காங்க பாருங்க” என்று கத்தி கோபமாக சொல்கிறார்..

நாய்க்கறி பிரியாணி

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளும் அதிர்ச்சியாகிவிட்டனர்.. எனினும் இந்த வீடியோ இருவேறு கருத்துகள் உருவாகியுள்ளன..

ஒரு தரப்பினர், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு மீறல் என்றும், மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.. “உணவுத் தரப் பரிசோதனைகள் முறையாக நடக்கிறதா?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்..

அதேசமயம், மற்றொரு தரப்பினர் இந்த புகாரை சந்தேகக்கண்ணோடு பார்க்கின்றனர்.. நன்றாக சமைக்கப்பட்ட பிறகு கோழி எலும்புகள், பிரிந்து இது போன்ற தோற்றத்தை தந்திருக்கலாம்.. அதுக்காக சொமாட்டோ மீது குறை சொல்ல முடியாது… உணவகத்தின் மீதுதான் தவறு இருக்க முடியும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்..

நாயின் கால்கள்

ஒரு சிலர் கிண்டலாக “ஒருவேளை நீங்கள் சீன உணவகத்தில் ஆர்டர் செய்திருப்பீர்களோ? இறைச்சி பீஸ் வித்தியாசமாக வந்துள்ளதே” என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளனர்..

எனினும் இந்த விவகாரத்தில் இன்னும் பல முக்கியக் கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.. வீடியோவில் காட்டப்படும் அந்த இறைச்சி துண்டு உண்மையில் நாய் இறைச்சி தானா என்பது அறிவியல் ரீதியாகவோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ இன்னும் நிரூபிக்கப்படவில்லை.. இந்த குற்றச்சாட்டு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அமைப்பும் இதுவரை சரிபார்க்கவில்லை..

மேலும், அந்த பிரியாணி எந்த உணவகத்தில் இருந்து வாங்கப்பட்டது என்ற விவரமும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.. சொமாட்டோ நிறுவனமோ அல்லது கான்பூர் உள்ளூர் அதிகாரிகளோ இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.. இதனால், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படாத மர்மமாகவே நீடிக்கிறது..!!!

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/it-wasnt-a-chicken-piece-unbelievable-discovery-in-kanpur-zomato-biryani-parcel-28-second-video-781245.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo