அபிஷேக் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையே காலி.. வீக்னஸை பிடித்துவிட்டார்கள்.. சீண்டும் முகமது ஆமீர்! | T20 World Cup 2026: Abhishek Sharma weakness and Strengths analysed by the opponents says Pakistan former Player Mohammad Amir

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு வீரருக்கு எதிராக ஒரு திட்டத்தை எதிரணிகள் வைத்திருப்பார்கள் என்றும், அபிஷேக் சர்மாவின் வீக்னஸை ஒவ்வொரு அணியும் கண்டுபிடித்துவிட்டது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் விமர்சித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் அபிஷேக் சர்மா 7 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

T20 World Cup 2026

மீண்டும் ஆஃப் ஸ்பின்னரிடம் அபிஷேக் சர்மா விக்கெட்டை பறிகொடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. எளிதாக டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி அவரை டீஸ் செய்யும் வகையில் பவுலிங் செய்தாலே எளிதாக விக்கெட்டை பறி கொடுத்துவிடுகிறார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களும் அவரின் ஸ்டம்ப் லைனில் அல்லது உடலை நோக்கி பவுலிங் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் பேசுகையில், இருதரப்பு தொடர்களுக்கும், ஐசிசி தொடர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இருதரப்பு தொடர்களில் பெரிதாக எந்த அணிகளும் ஒரு வீரருக்கு எதிராக திட்டமிட மாட்டார்கள். அப்படியான தொடர்களில் புதிய வீரர்களை உருவாக்கவும், சிலரை ஃபார்முக்கு கொண்டு வரவும் பயன்படுத்தி கொள்வார்கள்.

ஒரு வீரரை கட்டம் கட்டி அட்டாக் செய்ய மாட்டார்கள். ஆனால் ஐசிசி தொடர்கள் அப்படியல்ல.. ஒவ்வொரு வீரரின் வீக்னஸையும் எதிரணிகள் கண்டுபிடித்து திட்டங்களை அரங்கேற்றுவார்கள். அபிஷேக் சர்மாவின் வீக்னஸ் இப்போது வெளிப்பட்டுவிட்டது. இப்போது ஆஃப் ஸ்பின்னர்களிடம் அபிஷேக் சர்மா மாட்டிக் கொண்டுள்ளார்.

அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களும் நேராக அபிஷேக் சர்மாவின் உடலை தான் கட்டம் கட்டி வருகிறார்கள். உடலை நோக்கி வீசப்படும் பந்துகளுக்கு அபிஷேக் சர்மா திணறுவதை பார்க்க முடியும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாட முடியும் என்றால், டெக்னிக்கலாக மட்டுமல்லாமல் மனதளவிலும் பலமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-abhishek-sharma-weakness-and-strengths-analysed-by-the-opponents-says-pakistan-f-779175.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo