
International
oi-Halley Karthik
பெய்ஜிங்: சில நாட்களுக்கு முன்னர், வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து அந்நாட்டு அதிபரை கைது செய்திருந்தது அமெரிக்கா. இப்போது அமெரிக்கா ஆதரவு அரசுதான் அங்கு நடக்கிறது. அதேபோல ஈரானிலும் ஆட்சி கவிழ்ப்பை செய்து வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றதான் இப்படி செய்வதாக டிரம்ப் சொன்னாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் பெரிய திட்டம் இருக்கிறது.
அமெரிக்கா செய்ததை கவனியுங்கள். முதலில் வெனிசுலாவை காலி செய்தது, இப்போது ஈரான். இந்த இரண்டு நாடுகளும் சீனாவுக்குதான் மிகவும் நெருக்கமானவை.

வெனிசுலா எந்த அளவுக்கு முக்கியம்?
கவனம் பெற்ற கட்டுரை: அமெரிக்காவின் இந்த செயல்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து, மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் நந்தா, ‘eurasian times’-ல் எழுதியிருக்கும் கட்டுரை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இதில், சீனாவை தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்கா வெனிசுலாவையும், ஈரானையும் அட்டாக் செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
கச்சா எண்ணெய் அரசியல்
உலக அளவில் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுதான் சீனா. இந்த நாட்டுக்கு தேவையான எண்ணெயில் 20% வெனிசுலா மற்றும் ஈரானிலிருந்துதான் வருகிறது. குறிப்பாக வெனிசுலா, சீனாவுடன் அமெரிக்க டாலருக்கு பதில், சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்தது. எண்ணெய் விற்பனை டாலரில் நடப்பதால்தான், உலகின் சக்தி வாய்ந்த கரன்சியாக அமெரிக்க டாலர் இருக்கிறது. இதற்கு ஆபத்து வருகிறது எனில் டிரம்ப் சும்மா இருப்பாரா?
இழப்பை எதிர்கொண்ட சீனா
எனவேதான் வெனிசுலா மீது அட்டாக் செய்தார் டிரம்ப். மட்டுமல்லாது வெனிசுலாவில், சீனா ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்திருந்தது. எனவே கச்சா எண்ணெய் தடையில்லாமல் சீனாவுக்குள் நுழைந்திருந்தது. ஆனால், வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்ததால் மொத்தமாக இழப்பை எதிர்கொண்டிருக்கிறது சீனா. அமெரிக்காவின் திட்டமும் இதுதான்.
ஈரான் மேட்டரில் அமெரிக்கா
அதேபோல ஈரான் விஷயத்தில், நடந்ததையும் பிரகாஷ் நந்தா விளக்கியிருக்கிறார். வெனிசுலாவை விட ஈரான், சீனாவுடன் நெருக்கமாக இருந்தது. ஈரானிலிருந்தும் கச்சா எண்ணெய் அதிக அளவு சீனாவுக்கு போயிருக்கிறது. இதையும் முடக்குவதன் மூலம், சீனாவின் எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
யுவான் வர்த்தகம்: இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சீனா மேற்கொண்டு வந்த யுவான் வர்த்தகத்தையும் அமெரிக்கா முடக்கியிருக்கிறது என்பதுதான். அதேபோல போர்க்களத்தில் சீனாவின் தொழில்நுட்பம் தோல்வியடைந்திருக்கிறது. ஈரானிலும் வெனிசுலாவிலும் பயன்படுத்தப்பட்ட சீனாவின் HQ-9B ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் JY-27 ரேடார்கள், அமெரிக்காவின் F-22, F-35 போர் விமானங்களைக் கண்டறியவோ அல்லது தடுக்கவோ தவறிவிட்டன என்று, பிரகாஷ் நந்தா கூறியுள்ளார்.
சீனாவுக்கு பின்னடைவு: இப்படி நடந்தது, சீன தொழில்நுட்பம் மீதான நம்பிக்கைக்கு சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஈரானுடன் சீனா செய்துகொண்ட 25 ஆண்டு கால 400 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம் மற்றும் ‘பெல்ட் அண்ட் ரோடு’ (BRI) திட்டத்தின் கீழ் கட்டப்படும் துறைமுகங்கள், ரயில்வே இணைப்புகள் பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளன.
சீனா காலி
முன்னதாக கடந்த 2023ல் ஈரான்-சவுதி இடையே சமரச பேச்சுவார்த்தையை சீனா முன்னெடுத்திருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு எதிரான மாஸ்டர் ஸ்டோக்காக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த சமரசமும் நீர்த்து போய் இருக்கிறது என்று பிரகாஷ் நந்தா குறிப்பிட்டிருக்கிறார். ஆக மொத்தம் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகத்தையோ காப்பாற்றவோ, தீவிரவாதத்தை ஒழிக்கவோ கிடையாது. மாறாக, அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்ததான் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/the-china-containment-doctrine-analyzing-trump-s-strategic-strikes-on-iran-and-venezuela-782417.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


