அமெரிக்காவின் ரகசிய ஆயுதம்.. இது தெரியாம விளையாட கூடாது! | US Secret Weapon: Spruce Pine High-Purity Quartz Controls 80% of Global Semiconductor Supply – China Can’t Replace

Business

oi-Prasanna Venkatesh

உலகப் பொருளாதாரத்தில் சில பொருட்கள் மிக முக்கியமான ‘சக்தி’யாக இருக்கின்றன. சவுதி அரேபியாவுக்கு எண்ணெய் எப்படி முக்கியமோ, சீனாவுக்கு ரேர் எர்த் எப்படி முக்கிய பொருளாதார ஆயுதமோ, அதேபோல் அமெரிக்காவுக்கு ஒரு தனித்துவமான பொருள் உள்ளது.

அதுதான் ‘குவார்ட்ஸ்’, இது ஒரு கனிமம், ஒரு மணல் போன்றது. இந்த மணல் இல்லையென்றால் உலகின் மிக முக்கியமான செமிகண்டக்டர் சிப்கள் தயாரிப்பே நின்றுவிடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

USA Business china High Purity Quartz Spruce Pine Quartz US Semiconductor Weapon Silicon Chip Manufacturing US Strategic Mineral Spruce Pine high purity quartz US high purity quartz monopoly Spruce Pine North Carolina quartz high purity quartz semiconductor 11 nines quartz purity US quartz strategic advantage quartz crucible semiconductor Spruce Pine pegmatite deposits US controls 80 high purity quartz China rare earth vs US quartz global semiconductor supply chain chokepoint Spruce Pine quartz export control advanced chip manufacturing quartz US economic weapon quartz high purity silica sand semiconductor 11 80

வடக்கு கரோலினாவின் சிறிய நகரமான ஸ்ப்ரூஸ் பைன் (Spruce Pine) இங்கு தான் உலகின் பெரும்பாலான அதி தூய்மையான குவார்ட்ஸ் வளம் உள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரிய பொருளாதார பலமாக இருக்கிறது. இதே குவார்ட்ஸ் இந்தியா, சீனாவிலும் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இருப்பது கொஞ்சம் ஸ்பெஷல்.

குவார்ட்ஸ் என்றால் என்ன?

குவார்ட்ஸ் என்பது அடிப்படையில் மணல் தான். இது கண்ணாடி, கான்கிரீட் தயாரிப்பில் பயன்படுகிறது. ஆனால் இது சாதாரண மணல் அல்ல. உலகம் முழுவதும் மணல் கிடைத்தாலும், அதில் இரும்பு, மெக்னீசியம் போன்ற இதர கனிமங்களின் கலப்படம் இருக்கும். மிக உயரிய தூய்மையான குவார்ட்ஸ் தான் சூப்பர்பவர்.

எடுத்துக்காட்டாக, பிரான்சின் ஃபவுண்டன் ப்ளூ (Fountain bleau) இடத்தில் 99.7% சிலிக்கா கொண்ட குவார்ட்ஸ் கிடைக்கிறது. ஸ்காட்லாந்தின் லோசலின் (Lochaline) இடத்தில் 99.8% சிலிக்கா உள்ளது. இவை கண்ணாடி தயாரிப்புக்கு போதுமானவை. ஆனால் செமிகண்டக்டர் சிப்கள் தயாரிப்புக்கு இவை போதாது.

USA Business china High Purity Quartz Spruce Pine Quartz US Semiconductor Weapon Silicon Chip Manufacturing US Strategic Mineral Spruce Pine high purity quartz US high purity quartz monopoly Spruce Pine North Carolina quartz high purity quartz semiconductor 11 nines quartz purity US quartz strategic advantage quartz crucible semiconductor Spruce Pine pegmatite deposits US controls 80 high purity quartz China rare earth vs US quartz global semiconductor supply chain chokepoint Spruce Pine quartz export control advanced chip manufacturing quartz US economic weapon quartz high purity silica sand semiconductor 11 80

செமிகண்டக்டர் சிப்-க்கு தேவையான குவார்ட்ஸ்

செமிகண்டக்டர் சிப்களை தயாரிக்க மிக உயரிய தூய்மையான சிலிக்கா தேவை. சோலார் பேனல் சிப்களுக்கு 99.999999999% (ஒன்பது 9கள்) தூய்மை போதும். இது சீனாவிடம் உள்ளது. ஆனால் மிக முக்கியமான செமிகண்டக்டர் சிலிக்கான் சிப்களுக்கு 99.99999999999% (பதினோரு 9கள்) தூய்மை தேவை. இந்த உயர் தூய்மை குவார்ட்ஸ் (High-Purity Quartz – HPQ) உலகில் வேறு எங்கும் கிடையாது.

இது அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் ஸ்ப்ரூஸ் பைன் (Spruce Pine) நகரில் உள்ள சிறப்பு pegmatite deposits-களில் மட்டுமே கிடைக்கிறது. உலகின் 80%க்கும் மேற்பட்ட உயர் தூய்மை குவார்ட்ஸை அமெரிக்கா தான் வழங்குகிறது.

அமெரிக்காவின் பெரிய லெவரேஜ்

சீனா ரேர் எர்த் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி உலகத்தை அச்சுறுத்துவது போல், அமெரிக்காவும் உயர் தூய்மை குவார்ட்ஸை கட்டுப்படுத்த பெரிய லெவரேஜைப் பெற்றுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதி விதிகளை இறுக்கினால் அல்லது உள்நாட்டு மற்றும் நட்பு நாடுகளுக்கு மட்டும் வழங்கினால், மற்ற நாடுகளுக்கு மேம்பட்ட சிப் தயாரிப்பு மந்தமாகிவிடும்.

தைவான் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தியை குறைக்கவும், முடக்கவும் அமெரிக்காவால் முடியும், இதுதான் அமெரிக்காவின் லெவரேஜை. இது உலக சப்ளை செயின் முழுவதையும் பாதிக்கும் ஒரு முக்கிய சோக்பாயிண்ட் (chokepoint) ஆக விளங்குகிறது.

இதன் மூலம் அமெரிக்காவின் முக்கிய சூப்பர் பவராக இருப்பது குவார்ட்ஸ்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/us-secret-weapon-spruce-pine-high-purity-quartz-controls-80-of-global-semiconductor-supply-chin-788825.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo