
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, நட்சத்திர வீரர் சிவம் துபே சாதாரணமாக ரயிலில் பயணித்து வீட்டிற்கு சென்றிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு அகமதாபாத் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிய சிவம் துபே, மும்பையின் போரிவாலி ரயில் நிலையத்தில் இறங்கி சென்றிருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் சிவம் துபே முக்கிய காரணமாக அமைந்தார். ஏனென்றால் கடைசி ஓவருக்கு முன் 4 ஓவர்களில் ரன்கள் வராத போது, கடைசி ஓவரில் 24 ரன்களை சிவம் துபே விளாசி தள்ளினார்.

அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் சிவம் துபே 235 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இது இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை கொண்டாட்டத்திற்கு பின் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சிவம் துபே ரயிலில் ஏறி குடும்பத்துடன் வந்திருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணி வீரர்கள் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்ல சிவம் துபே விமான டிக்கெட் புக் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், சிவம் துபே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவருடன் மனைவி அஞ்சும் மற்றும் நண்பர் இருந்துள்ளனர்.
சிவம் துபேவின் 4 வயது மகன் அயான் மற்றும் 2 வயது மகள் மேவிஷ் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அவர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாட சிவம் துபே நினைத்து உடனடியாக புறப்பட முடிவு எடுத்துள்ளார். காரில் செல்லலாம் என்றாலும், ரயிலில் கூடுதல் வேகமாக செல்ல முடியும் என்று தெரிந்துள்ளது. இதையடுத்து அகமதாபாத் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5.10 மணிக்கு மும்பை செல்லும் ரயிலில் டிக்கெட் புக் செய்திருக்கிறார்.
அப்போதும் 3வது ஏசி பெட்டியில் டிக்கெட் கிடைத்துள்ளது. அகமதாபாத் ரயில் நிலையத்தில் அப்போதும் சில ரசிகர்கள் இந்திய அணி ஜெர்சியுடன் மும்பைக்கு செல்ல தயாராக இருந்துள்ளனர். இதனால் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பாக சிவம் துபே ரயிலில் ஏறி இருக்கிறார். இதன்பின் டிக்கெட் பரிசோதகர் வந்து சிவம் துபே.. நீங்கள் என்ன கிரிக்கெட் வீரரா என்று கேட்டுள்ளார். அதற்கு மனைவி அஞ்சும் உடனடியாக மறுத்துள்ளார்.
அந்த நேரத்தில் சிவம் துபே மாஸ்க், கண்ணாடி, கேப் அணிந்து இருந்திருக்கிறார். பின்னர் மேல் இருந்த பெர்த்தில் இருந்து சிவம் துபே கீழே இறங்கவே இல்லை. சிவம் துபேவை விடவும் அவரின் மனைவி மற்றும் நண்பர் தான் யாராவது பார்த்தால் கூட்டம் கூடி விடும் என்று பரபரப்புடன் இருந்திருக்கின்றனர். இதன்பின் மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற சிவம் துபே போலீஸார் உதவியை நாடி இருக்கிறார்.
அவர்களும் மும்பை விமான நிலையம் தானே என்று கேள்வி எழுப்ப, அவர் ரயில் நிலையம் என்று பதில் அளித்ததால், அவர்களும் பரபரப்பாகி இருக்கின்றனர். இதன்பின் சிவம் துபே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வீடு சென்று சேர்ந்துள்ளார். சிவம் துபே குழந்தைகளை பார்க்க இவ்வளவு வேகமாகவும் எளிமையாகவும் பயணித்தது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-shivam-dube-quietly-took-5-am-train-from-ahmedabad-to-mumbai-after-india-won-the-780393.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
