“இதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் பண்ணுங்க”.. கையில் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை! | Father Murdered, Daughter Dies by Suicide in Nellai: Note Reveals Anguish

Tamilnadu

oi-Vignesh Selvaraj

நெல்லை: நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துக்கத்தை தாங்க முடியாத வேதனையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி மர்ம கும்ப கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்யவில்லை. இதனால் அவரது உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Father Murdered Daughter Dies by Suicide in Nellai Note Reveals Anguish

இந்நிலையில், ஆறுமுகத்தின் மகளான பேபி கனி (வயது 23), தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் இன்று காலை இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்கொலை செய்துகொண்டு இறந்த இளம்பெண் தனது தந்தை இறந்த காரணத்தினால் என்னால் இழப்பு தாங்க முடியவில்லை. எனது உறவினர் ஒருவர் தான் இதற்கு காரணமாக இருக்கும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

மேலும் தனது உள்ளங்கையிலும் எழுதி வைத்துள்ளார். அதில், இந்தக் கடிதத்தில் எழுதி இருப்பதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் செய்யுங்கள் என அந்த இளம்பெண் எழுதி உள்ளார். தந்தை இறந்த துக்கத்தில், தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆறுமுகத்தின் உறவினர்கள், ஊர்காரர்கள் அனைவரும் சேர்ந்து இந்த சம்பவத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நெல்லை அரசு மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அரசு மருத்துவமனை முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/father-murdered-daughter-dies-by-suicide-in-nellai-note-reveals-anguish-783505.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo