இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் | Indonesia Sea Coelacanth Mystery Unveiled: The World Stunned By 400 Million Year Old Living Fossil

International

oi-Hema Vandhana

ஜகார்த்தா: உலகமே வியப்பில் உறைந்து போய் கிடக்கிறது.. பல கோடி வருஷத்துக்கு முன்னாடி, அதாவது இந்த பூமியில் டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே வாழ்ந்த ஒரு விசித்திரமான மீன் இனம் இப்போதும் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கடலுக்கு அடியில் மர்மமான முறையில் நடமாடும் இந்த விசித்திர மீனை “சிலகாந்த்” (Coelacanth) என்று ஆராய்ச்சியாளர்கள் இதற்கு புதுசா ஒரு பெயரையும் வைத்திருக்கிறார்கள்.. இது குறித்த அதிர வைக்கும் புதிய வீடியோ ஆதாரங்கள் இன்று இந்தோனேஷியாவில் இருந்து வெளியாகியுள்ளது.

விசித்திர மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்த மீன் இனம் முற்றிலும் அழிந்துவிட்டது என்றுதான் இத்தனை காலம் விஞ்ஞானிகள் நம்பி இருந்தனர்..

Indonesia Sea Coelacanth Mystery Living Fossil Discovery Banggai Islands Rare Fish 400 Million Year Old Species Laurent Ballesta Video Deep Sea Exploration 2026 Prehistoric Marine Life Indonesian Marine Biology Dinosaur Era Fish Video 40 2026

ஆனால், கடந்த 1938ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் மார்ஜோரி கோர்டினே என்பவர் முதன்முதலில் இதை உயிருடன் பார்த்தார்.. பிறகு ஜே.எல்.பி. ஸ்மித் என்பவர் இதன் அறிவியல் ரகசியங்களை உலகுக்கு தெரியப்படுத்தினார்.. இதனால் தான் சிலகாந்த் மீனுக்கு Living Fossil அதாவது “வாழும் புதைபடிவம்” என்ற பெயர் வந்தது..

இந்தோனேஷியா கடல் மர்மம்

இப்போது, இந்தோனேஷியாவில் இதற்கு வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.. இந்த புதிய வீடியோதான் மீண்டும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.. இந்த வீடியோ வைரலாகி கொண்டுமிருக்கிறது.

இந்தோனேஷியாவில் உள்ள பாங்காய் தீவு கடல் பகுதியில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த லாரன்ட் பலெஸ்டா தலைமையிலான டைவர்ஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.. சுமார் 145 மீட்டர் ஆழத்தில், சூரிய வெளிச்சம் கூட நுழைய முடியாத இருட்டான பகுதியில், பாறைகளுக்கு நடுவே ஒரு ராட்சத சிலகாந்த் மீன் நீந்துவதை அவர்கள் பார்த்து திகைத்து போனார்கள்.. மெல்ல அதன் அருகில் சென்ற, வீடியோவாக பதிவு செய்துள்ளனர்..

விநோத கால்கள்

அந்த மீன் சாதாரண மீன்களைப் போல கிடையாது.. மிகவும் விசித்திரமான உடல் அமைப்பை கொண்டுள்ளது.. மற்ற மீன்களுக்கு இறக்கை போன்ற மெல்லிய துடுப்புகள் இருக்கும், ஆனால் இந்த மீனுக்கு கால்களைப் போன்ற 8 தடிமனான துடுப்புகள் உள்ளன. இது பார்ப்பதற்கே விநோதமாக உள்ளதாம். அதாவது இதை பார்க்கும்போது மீனுக்கு கால்கள் முளைத்தது போல ஒரு தோற்றத்தை தருகிறதாம்..

இந்த துடுப்புகளைப் பயன்படுத்தி கடலின் தரைப்பகுதியில் மெதுவாக நடந்து செல்வது போலவே இந்த மீன் நீந்துகிறது.. சுமார் 2 மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய இந்த மீனின் உடல் முழுவதும் பாறை போன்ற மிகக் கடினமான செதில்கள் காணப்படுகின்றன..

வாழும் புதைபடிவம்

பல கோடி வருஷத்துக்கு முன்னாடி கடலில் வாழ்ந்த உயிரினங்கள் காலப்போக்கில் அழிந்து போயின.. ஆனால் இத்தனை கோடி வருடங்களாக பூமியில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தும், இந்த மீன் மட்டும் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே இன்று வரை இருப்பதுதான் இதில் உள்ள பெரிய ரகசியம்.. இதனால் தான் இதனை “வாழும் புதைபடிவம்” என்று விஞ்ஞானிகள் பெருமையுடன் சொல்கிறார்கள்..

இந்த வீடியோ இப்போது உலகெங்கும் தீயாகப் பரவி வருகிறது.. இயற்கையின் இந்த விசித்திரமான படைப்பு நம்மை மிரள வைக்கிறது.. ஆழ்கடலில் இன்னும் எத்தனையோ மர்மங்கள் ஒளிந்து கிடக்கின்றன என்பதை இந்த கண்டுபிடிப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது..!!!

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/indonesia-sea-coelacanth-mystery-unveiled-the-world-stunned-by-400-million-year-old-living-fossil-786989.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo