
International
oi-Shyamsundar I
டெஹ்ரான்: அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து உலக அளவில் சந்தை வளர்ச்சி அடைந்து உள்ளது. பங்கு சந்தைகள் முன்னேற்றம் அடைந்து உள்ளது.
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரிக்கிறது. அமைதிக்கு அந்த நாடு ‘நோ’ சொன்ன அடுத்த நிமிடம், உலகப் பங்குச்சந்தைகள் (Wall Street) உற்சாகத்தில் எகிறுகின்றன. ரத்தம் சிந்தும் ஒரு போர்க்களத்தில் அமைதி முறியடிக்கப்படும்போது, சந்தை ஏன் கொண்டாடுகிறது? லாஜிக் உதைக்கிறதா?

இங்கேதான் ‘ஜியோ-பாலிட்டிக்ஸ்’ எனும் சதுரங்க ஆட்டம் ஒளிந்திருக்கிறது. கடந்த ஆண்டு சீனா ஆடிய அதே பழைய பிளே-புக் தான் இதுவும்.
பெட்ரோல் விலையா? பேச்சுவார்த்தையா?
வெள்ளை மாளிகை தொடங்கி டெஹ்ரானின் உச்ச தலைவரின் மாளிகை வரை அமைதி பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகள் நடந்தன. ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.வெள்ளை மாளிகையில் அமைதி பேச்சுவாத்தைக்கு தீவரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏன் பாகிஸ்தானை வைத்து அவர்கள் மூலமாக கூட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பாகிஸ்தானின் ‘மீடியேட்டர்’ (Mediator) அவதாரம். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை கிடையாது. வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தான் ஈரானின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுகிறது.
இன்று டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே ரகசியத் தகவல்களைப் பரிமாறும் ஒரே ‘ஹாட்லைன்’ இஸ்லாமாபாத் தான். ஒருபுறம் அமெரிக்க அதிபர் தரப்புடன் ரகசிய டீல், மறுபுறம் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் நட்பு என இரண்டு தரப்பையும் ஒரே மேசைக்குக் கொண்டுவரும் ‘பஞ்சாயத்துக்காரர்’ வேலையை பாகிஸ்தான் கச்சிதமாகச் செய்கிறது. இந்தப் போர் முடிவுக்கு வந்தால், உலக அரங்கில் பாகிஸ்தானின் ராஜதந்திர மதிப்பு பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமே இல்லை!
ஆனால் உண்மையில் வெள்ளை மாளிகையில் ரகசிய அறையில் அமர்ந்திருக்கும் யாருக்கும் அமைதி மேல் அக்கறை இல்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் ‘லெவரேஜ்’ (Leverage) மட்டுமே. அதாவது போர் வழியாக எப்படி பணம் சம்பாதிப்பது. அமெரிக்கா பொதுவாக போர் செய்தால் அதை பயன்படுத்தி பல சென்ட்டர்கள் கோடிகளில் பங்குசந்தையில் லாபம் பார்ப்பார்கள். அதை அமெரிக்கா இப்போதும் செய்துள்ளது.
ஈரானின் கணக்கு:
அதாவது பங்கு சந்தையை பாசிட்டிவ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக டிரம்ப் பேச்சுவார்த்தை நடப்பதாக பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது.. பாகிஸ்தான் வரப்போகிறது.. அமைதி வரப்போகிறது என்று பொய் சொல்கிறார். இதை நம்பி மார்க்கெட் வளர்ச்சி அடைகிறது.
பலரின் சரிந்த பங்குகள் மீண்டும் உயருகிறது. அதாவது போர் நிற்காத நிலையில் போர் நிற்பது போல காட்டிக்கொள்கிறார்கள். அமெரிக்காவின் திட்டமே.. அடுத்த வாரம் பங்குச்சந்தை தொடங்குவதற்குள் ஒரு பாசிட்டிவ் ஹெட்லைன் வேண்டும். அதனால் “பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்” எனத் தகவல்களை கசியவிட்டு விலையை கட்டுக்குள் வைக்கப் பார்க்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஈரானுக்கு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரைத் தொட வேண்டும். அப்போதுதான் அவர்களின் பொருளாதாரம் மூச்சுவிடும். அதனால் “போர் நீடிக்கும்” என்ற பிம்பத்தை ஈரான் அரசியல் தலைகள் தக்கவைக்கிறார்கள்.
ஒரு பக்கம் 3,000 கூடுதல் துருப்புக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரைந்து கொண்டிருக்க, மறுபக்கம் இரு நாடுகளும் சந்தைக்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றன. அதாவது நிற்காத போரை நிற்கும் என்பது போல காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/how-rich-people-are-getting-richer-using-the-iran-usa-war-by-manipulating-the-market-784547.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
