ஒரு காலத்துல சிஎஸ்கே எப்படி இருந்த டீம் தெரியுமா.. ரொம்ப வருத்தமா இருக்கு.. புலம்பி தள்ளிய அஸ்வின்! | CSK: Ravichandran Ashwin hurts with CSK Players body language after the 12th Over against Punjab kings at Chepauk in IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே அணி வீரர்கள் 12வது ஓவரின் போதே நம்பிக்கையை இழந்துவிட்டதாக முன்னாள் வீரர் அஸ்வின் விமர்சித்துள்ளார். அதேபோல் ஒரு காலத்தில் சிஎஸ்கே எப்படி இருந்த அணி தெரியுமா என்று புலம்பிய அஸ்வின், பிரசாந்த் வீர்-ஐ விடவும் ஏலத்தில் சிறந்த வீரர்கள் இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சேப்பாக்கம் மைதானத்திலேயே சிஎஸ்கே அணி அடைந்திருக்கும் தோல்வி ரசிகர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி வீரர்களிடையே தோல்வி அடைய மாட்டேன் என்ற பிடிவாத குணம் இல்லாததே ரசிகர்கள் மத்தியில் விவாதமாக இருக்கிறது.

CSK

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நிலை தொடர்பாக முன்னாள் வீரர் அஸ்வின் புலம்பி தள்ளி இருக்கிறார். அவரின் யூடியூப் சேனலில் அஸ்வின் பேசுகையில், ருதுராஜ் கெய்க்வாட் பிட்ச் கொஞ்சம் ஸ்டிக்கியாக இருப்பதாக கூறி இருந்தார். ஆனால் இந்த பிட்சில் எதுவுமே இல்லை. ஃபிளாட் பிட்ச் தான் இது.. அதனால் பவுலர்களை மனதில் வைத்து கூடுதலாக சில ரன்களை விளாசி இருக்க வேண்டும்.

210 ரன்கள் என்பது கம்மி தான். என்னுடைய கேள்வி ஒன்றுதான். வெங்கடேஷ் ஐயர், கூப்பர் கானலி, டேவிட் மில்லர், ஜேசன் ஹோல்டர், இங்கிடி, சலீல் அரோரா உள்ளிட்ட வீரர்கள் அவர்களின் மதிப்பிற்கும் 50% குறைவான தொகைக்கே மற்ற அணிகளால் ஏலத்தில் வாங்கப்பட்டார்கள். அதேபோல் சிஎஸ்கே அணிக்கு சிவம் துபேவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் அனுபவம் இல்லை.

ஆயுஷ் மாத்ரே மற்றும் உர்வில் படேல் இருக்கிறார்கள். இது பிரசாந்த் வீர்க்கு எதிரான வாதம் கிடையாது. அந்த பையன் திறமைசாலி.. அவர் இன்னும் கற்றுக்கொள்ளட்டும்.. கார்த்திக் சர்மாவிடம் மிகப்பெரிய திறமை உள்ளது. ஆனால் ஷார்ட் பால் வீசப்பட்டு, அதனை அடிப்பதற்கு தொண்டைக்கு வந்துவிட்டது. அப்படியென்றால் பிரசாந்த் வீரிடம் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அவருக்கு அத்தனை பந்துகளையும் ஷார்ட்டாக வீசி இருக்கிறார்கள்.

சிஎஸ்கே ஒரு காலத்தில் எப்படிப்பட்ட டீம் தெரியுமா.. சேப்பாக்கம் நான் ஆடிய மைதானம்.. சென்னை தான் எனக்கு கவுரவம்.. தமிழ்நாட்டிற்கு ரஞ்சி டிராபி பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்று ஒவ்வொரு நாளும் வருந்துகிறேன்.. எனக்கு மிகப்பெரிய குறை அதுதான்.. சிஎஸ்கே அணி வீரர்களின் தோள் 12வது ஓவரிலேயே தொங்கிவிட்டது.. அவ்வளவு வருத்தமாக இருந்தது.

அவர்களின் உடல்மொழியிலேயே சிஎஸ்கே அணியின் சூழல் தெரிந்துவிட்டது.. அனுபவம் இல்லாத வீரர்கள்.. சோசியல் மீடியாவில் யாரும் எதுவும் சொல்லவில்லை என்றால், வெற்றி கிடைக்காது. நான் பிறந்த இடம் சென்னை.. முதல் பந்தில் கில்கிறிஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய போது, பெவிலியனில் இருந்த எதிரணியின் முகம் தொங்கிவிட்டது. அப்படி இருந்த சிஎஸ்கே அணி..

என்ன இருந்தாலும் ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். 5 டைட்டில் என்பது மிகப்பெரிய லெகசி.. ஆனால் அந்த லெகசியை ஆயுஷ் மாத்ரே மீதும், கார்த்திக் சர்மா மீதும் அழுத்தமாக போட கூடாது. இன்னும் சில ஆண்டுகளில் சிஎஸ்கே வீரர்கள் வளரும் போது மீண்டும் வீழ்த்த முடியாத அணியாக சிஎஸ்கே அணி மாறும் என்று தெரிவித்துள்ளார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-ravichandran-ashwin-hurts-with-csk-players-body-language-after-the-12th-over-against-punjab-kin-787005.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo