
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐபிஎல் தொடரின் போது ஒவ்வொரு அணிகள் சார்பாகவும் ரசிகர்களை குதூகலப்படுத்த சியர் லீடர்ஸ் பயன்படுத்தப்படுவது வழக்கம் தான். அவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை ஊதியமாக அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெற்றி பெற்றால் கூடுதலாக ரூ.3 ஆயிரம் வரை போனஸ் தொகை அளிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. இந்த முறை சிஎஸ்கே அணியும் இளம் வீரர்களை கொண்ட படையை தயார் செய்துள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடர் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதங்கள் தொடங்கி இருக்கிறது.

அதிலும் ஒவ்வொரு அணியிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சியர் லீடர்ஸ் மற்றும் அவர்களுக்கான ஊதியம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரசிகர்களை கிரிக்கெட் போட்டியை குதூகலமாக பார்க்க வைக்க சியர் லீடர்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு சிக்ஸ், பவுண்டரிக்கும் ரசிகர்கள் முன்னிலையில் டான்ஸ் ஆடுவது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இதில் சியர் லீடர்ஸ்க்கு ஒவ்வொரு போட்டிக்கும் கேகேஆர் அணிதான் அதிக ஊதியம் அளித்து வருகிறது. அதன்படி ரூ.24 ஆயிரம் வரை சியர் லீடர்ஸ்க்கு ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பின் மும்பை மற்றும் ஆர்சிபி அணி தரப்பில் சியர் லீடர்ஸ்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. சிஎஸ்கே, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் ரூ.17 ஆயிரம் வரை ஊதியம் அளித்து வருகின்றன.
டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகள் ரூ.12 ஆயிரம் வரை ஊதியமாக அளித்து வருகின்றன. அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணியின் சியர் லீடர்ஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் போனஸாக அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் டிவி புரோமோக்கள், விளம்பரங்களில் இடம்பெற்றால், ஒரு நாளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது.
இதன் மூலமாக ஒரு சீசனுக்கு சியர் லீடர்கள் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஊதியமாக பெற முடியும். இதனிடையே அவர்களின் உணவு, தங்கும் ஹோட்டல் கட்டணங்கள், மெடிகல் செலவுகள் உள்ளிட்டவற்றை அந்தந்த அணி நிர்வாகங்களே செலவு செய்யும். பெரும்பாலும் சியர் லீடர்கள் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2026-how-much-a-csk-kkr-and-mi-is-paying-for-cheerleaders-per-match-in-ipl-which-is-surprising-784689.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
