கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு | What did Ammu do to her husband—whom she married for love—in Kallakurichi?

Tamilnadu

oi-Velmurugan P

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அந்தோணி ராபினும், அம்முவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அம்முவுக்கும், அவருடைய சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது பேசி வந்துள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட அந்தோணி ராபின் அம்முவை கண்டித்துள்ளார். இதனால் அந்தோணி ராபினுக்கு என்ன நடந்தது தெரியுமா? சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

இன்றைக்கு குடும்ப உறவுகள் பலவீனமாகி கொண்டே போகிறது. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போவதும், ஸ்மார்ட்போனும் உறவையே பிரிக்கின்றன. சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமில்லாதவர்களுடனான தொடர்புகள் எளிதாகிவிட்டதால் உறவுகளை பிரிந்து புதிய உறவை தேடும் ஆர்வமும் அதிகமாகி வருகிறது. அதேபோல் விட்டுக்கொடுத்து செல்லும் குணம் குறைந்து போனதால், சமரசம் என்பதே இல்லாமல் பிரிகிறார்கள்.

Kallakurichi

கள்ளக்காதல்

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக்குடித்தனங்கள் பெருகியதால், பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவோ அல்லது அறிவுரை சொல்லவோ பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை. பொருளாதார நெருக்கடி தரும் மன அழுத்தம், யாரிடமாவது கோபத்தைக் காட்டத் தூண்டுகிறது. அதேபோல் பிரச்சனைகளை வெளியில் சொல்ல அல்லது உதவுவதற்கு ஒரு ஆறுதல் வெளியே கிடைக்கும் போது, அதனை விட மறுக்கிறார்கள். அதுதான் பின்னாளில் கள்ளக்காதலாக மாறுகிறது. அதேபோல் கள்ளக்காதலில் சிக்கியவர்கள் தங்கள் துணையை காலி செய்யவும் தயங்குவது இல்லை.. கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

குடும்ப பிரச்சனை

கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமந்தல் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் அந்தோணி ராபின் தனியார் கியாஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அம்மு (22). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அந்தோணி ராபின் குடும்பப் பிரச்சினையில் தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டதாகக் கூறி அவருடைய மனைவி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தோணி ராபின் உயிரிழந்தார்.

சந்தேகம்

இந்த நிலையில் அந்தோணி ராபின் சாவில சந்தேகம் இருப்பதாகவும், அவரை மனைவி அம்முதான் கொலை செய்திருக்க வேண்டும் எனவும், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அம்முவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரே தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்தார்.

வாக்குமூலம்

போலீசாரிடம் அம்மு அளித்த வாக்குமூலத்தில், அந்தோணி ராபினும், நானும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் எனக்கும், என் சகோதரியின் கணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது பேசி வந்தோம். இதனால் என் மீது சந்தேகம் கொண்ட என் கணவர் அந்தோணி ராபின் கடுமையாக கண்டித்தார். இதனால் எங்களுக்கு இடைமேய குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டிற்கு மதுபோதையில் வந்த என் கணவர் அந்தோணி ராபின் தகராறில் ஈடுபட்டார்.

கணவனை எரித்தார்

இதனால் ஆத்திரமடைந்த நான் என் கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன். பின்னர் வீட்டில் படுத்துத் தூங்கிய அந்தோணி ராபின் மீது வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றினேன். இதில் சுதாரித்துக் கொண்ட அந்தோணி ராபின் வீட்டில் இருந்து வெளியேறி சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த நான், அவர் மீது தீ வைத்து எரித்தேன். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததும், என் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக நாடகம் ஆடினேன். போலீசாரின் விசாரணையில் மாட்டிக் கொண்டேன்” இவ்வாறு அம்மு வாக்குமூலம் அளித்தாராம். இதையடுத்து அம்முவை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/what-did-ammu-do-to-her-husband-whom-she-married-for-love-in-kallakurichi-781005.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo