காதலிக்காக ரூ.12 கோடிக்கு கார் வாங்கிய ஹர்திக் பாண்டியா.. அண்ணனுடன் மோதிவிட்டு இப்படி செய்யலாமா! | Hardik Pandya: Hardik Pandya has purchased a new Ferrari sports car worth Rs.12 crore for his girlfriend Mahieka Sharma at Mumbai

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.12 கோடிக்கு புதிய ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரினை வாங்கி இருக்கிறார். ரூ.12 கோடிக்கு வாங்கியுள்ள ஃபெராரி காரில் தனது காதலி மஹிகா சர்மாவுடன் மும்பை நகரில் வலம் வரும் புகைப்படங்களில் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற பின் அகமதாபாத் மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடன் ரொமான்ஸ் செய்ய தொடங்கினார். மைதானத்தில் முத்தம் கொடுத்ததோடு, வெற்றிக் கொண்டாட்ட அரங்கிலேயே படுத்துவிட்டார். இது ரசிகர்களிடையே சர்ச்சையை உருவாக்கியது.

Hardik Pandya

அதுமட்டுமல்லாமல் தனது அண்ணன் க்ருணால் பாண்டியாவுடன் மோதல் போக்கை ஹர்திக் பாண்டியா கடைபிடித்து வருகிறார். மஹிகா சர்மா உடனான உறவே இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ரூ.12 கோடிக்கு ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரினை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

முன்னதாக ஹர்திக் பாண்டியா ஆரஞ்சு நிற லம்போர்கினி காரை வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா தற்போது ஃபெராரி 458 ஸ்பைடர் மாடல் காரினை வாங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் புதிய படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஃபெராரி 458 ஸ்பைடர் கார் 4.5 லிட்டர் V8 நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

இது 570 ஹார்ஸ் ஸ்பீட் மற்றும் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த கார், வெறும் 3.4 வினாடிகளில் 0-100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும். இந்த மாடல், ஃபெராரியின் முதல் நடுத்தர இன்ஜின் கொண்ட கன்வெர்டிபிள் ஹார்டாப் காராகும். இதில் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு புதிய 458 ஸ்பைடர் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹4.34 கோடி என்றாலும், ஹர்திக்கின் கார் ரூ12 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஃபெராரி காரில் பல்வேறு வசதிகளை ஹர்திக் பாண்டியா செய்ய அறிவுறுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதனை மஹிகா சர்மாவுக்காக ஹர்திக் பாண்டியா வாங்கி இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவிடம் ஏற்கனவே மெர்சிடிஸ் AMG G63 SUV மற்றும் ரேஞ்ச் ரோவர் போன்ற சொகுசு கார்கள் உள்ளன. அவரது கார் கலெக்‌ஷனில் தற்போது ஃபெராரி 458 ஸ்பைடரும் இணைந்துள்ளது, அவரது ஆடம்பர வாழ்க்கைக்கு மேலும் ஒரு படி மேலே சென்றுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/hardik-pandya-hardik-pandya-has-purchased-a-new-ferrari-sports-car-worth-rs-12-crore-for-his-girlfr-782131.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo