
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் சூழலில், திடீரென நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மாடலான ஸ்வேதாவுடன் திடீரென திருமணம் நடந்தது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள். 2024 ஐபிஎல் தொடரில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக யாஷ் தயாள் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். அதற்கு முன்பாக யாஷ் தயாள் பவுலிங்கில் ரிங்கு சிங் 5 சிக்சரை விளாசி இருந்தார். இதன்பின்னரும் கூட இந்திய ஏ அணி வரை யாஷ் தயாள் முன்னேறி வந்தார்.

ஆனால் யாஷ் தயாளின் செயல்பாடுகள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஏனென்றால் யாஷ் தயாள் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக கீழமை நீதிமன்றம் யாஷ் தயாளுக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்ததால், அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் ராஜஸ்தான் நீதிமன்றம் யாஷ் தயாளுக்கு முன் ஜாமீன் வழங்கியதால், வழக்கை எதிர்கொண்டு வருகிறார். அதேபோல் 2023ஆம் ஆண்டு விளையாட்டில் முன்னேற நினைத்த 17 வயது சிறுமிக்கு உதவி செய்கிறேன் என்று கூறி, அவருக்கும் யாஷ் தயாள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தன. இதனால் தொடர்ச்சியாக யாஷ் தயாள் பாலியல் தொல்லை கொடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
இருப்பினும் யாஷ் தயாளை ஆர்சிபி அணி தக்க வைத்தது. அதேபோல் யாஷ் தயாள் எந்த சர்ச்சைகளுக்கும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் யாஷ் தயாள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சரான ஸ்வேதா புண்டிர் என்பவரை யாஷ் தயாள் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஸ்வேதாவுக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 6 லட்சம் பேர் ஃபாலோயர்களாக இருக்கின்றனர். வெறும் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். அதேபோல் திருமணம் முடிந்து ஒரு மாததிற்கும் மேலாகிவிட்ட சூழலில், யாஷ் தயாள் இதுவரை திருமண புகைப்படங்களை கூட வெளியிடவில்லை.
இதனால் சர்ச்சைகளுக்கு பயந்தே யாஷ் தயாள் புகைப்படத்தை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் யாஷ் தயாள் திருமணம் செய்துள்ள ஸ்வேதாவின் புகைப்படங்களில் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் புது மாப்பிள்ளையாக யாஷ் தயாள் விளையாடுவார் என்று தெரிகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/yash-dayal-rcb-player-yash-dayal-married-a-instagram-model-shweta-pundir-in-a-private-marriage-cere-781737.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
