
Business
oi-Prasanna Venkatesh
தங்கம், வெள்ளி விலை சமீபகாலமாக பெரிய அளவில் தடுமாற்றம் அடைந்து வரும் வேளையில் சில்வர் ஈடிஎப் முதலீட்டு சந்தையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தங்கம், வெள்ளியை நேரடியாக வாங்க முடியாத பல கோடி மக்கள் ஈடிஎப் வாயிலாக பெரும் தொகையை கடந்த 6 மாத காலத்தில் முதலீடு செய்தனர். இந்த முதலீட்டில் மிகப்பெரிய லாபம் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில், வெள்ளி விலை 4 லட்சம் ரூபாய் தொட்ட பின்பும் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
சில்வர் ஈடிஎப் (Silver ETFs) முதலீடு செய்தவர்களுக்கு வெறும் இரண்டு மாதங்களில் 15% வரை இழப்பு, ஒரு மாதத்தில் 20 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பலர் தங்களது முதலீட்டு முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதேபோல் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்த புதிய மதிப்பீட்டு (valuation) விதிமுறைகள், சில்வர் ETF-களின் செயல்திறனை கூடுதலாக பாதித்துள்ளன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் சில்வர் ஈடிஎப் முதலீட்டில் எவ்வளவு லாபம் வரும் என்பதில் அதிகப்படியான அச்சத்தில் உள்ளனர்.
| ETF பெயர் | தற்போதைய விலை (NAV) | 1 மாத வருவாய் |
| நிப்பான் சில்வர் இடிஎஃப் (சில்வர்பீஸ்) | 222.05 | -19.15% |
| ஐசிஐசிஐ ப்ரூ சில்வர் இடிஎஃப் | 231.45 | -19.16% |
| எச்டிஎஃப்சி சில்வர் இடிஎஃப் | 222.23 | -19.53% |
| எஸ்பிஐ சில்வர் இடிஎஃப் | 227.55 | -19.13% |
| டாடா சில்வர் இடிஎஃப் | 22.56 | -19.02% |
| ஆதித்யா பிர்லா சில்வர் இடிஎஃப் | 231.41 | -18.97% |
| ஆக்சிஸ் சில்வர் இடிஎஃப் | 230.9 | -19.06% |
| டிஎஸ்பி சில்வர் இடிஎஃப் | 223.74 | -19.35% |
| கோடக் சில்வர் இடிஎஃப் | 22.48 | -19.37% |
| எடெல்வைஸ் சில்வர் இடிஎஃப் | 231.24 | -19.15% |
| யூடிஐ சில்வர் இடிஎஃப் | 224.17 | -19.30% |
| ஜெரோதா சில்வர் இடிஎஃப் | 23.56 | -18.90% |
| மோதிலால் ஓஸ்வால் சில்வர் இடிஎஃப் | 229.04 | -18.78% |
| மிரே அசெட் சில்வர் இடிஎஃப் | 225.63 | -19.03% |
| க்ரோ சில்வர் இடிஎஃப் | 22.76 | -19.29% |
| 360 ஒன் சில்வர் இடிஎஃப் | 228.72 | -18.85% |
| ஏஞ்சல் ஒன் சில்வர் இடிஎஃப் | 8.84 | -19.85% |
வெள்ளி ETF சரிவுக்கு முக்கிய காரணங்கள்
சந்தை நிபுணர்கள் கூறுகையில், இந்த திடீர் சரிவுக்கு பல காரணங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் முக்கியமாக, சீனாவில் அறிவிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சில்வர் ஈடிஎப் விலை சரிவுக்கு முக்கிய தூண்டுதலாக இருந்துள்ளன.
இதோடு சீன ஒழுங்குமுறை அமைப்புகள் சில்வர் ஊக வர்த்தகத்தை கட்டுப்படுத்தியதால், அதிக கடன் அடிப்படையில் செய்யப்பட்ட முதலீடுகள் திடீரென வெளியேற தொடங்கின. இதனால் வெள்ளி விலை வேகமாக சரிய துவங்கின.
இதனுடன், உலகளாவிய அளவில் Silver Exchange Traded Funds-களில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வெளியேற்றியதும், வெள்ளி விலை கடுமையாக சரிவதற்கு காரணமாக அமைந்தது.
மேலும், அமெரிக்க டாலர் வலுவடைதல், தொழில்துறை தேவை குறையும் எதிர்பார்ப்பு, பணவீக்க தாக்கத்தால் வட்டி விகிதம் உயரும் அச்சம் மற்றும் சந்தைகளில் உருவான பாதுகாப்பு மனநிலை ஆகியவை வெள்ளி விலை மீதான சரிவை தீவிரப்படுத்தின.
நிபுணர்கள் சொல்வது என்ன..?
முதலீட்டு சந்தை நிபுணர்கள், தற்போதைய சூழலில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறுகின்றனர். வெள்ளி ஈடிஎப் மீது அதிக விலையில் முதலீடு செய்தவர்கள், தங்களது முதலீட்டை மறுசீரமைத்து (rebalancing) அபாயத்தை குறைக்க வேண்டும். மேலும், சில்வர் ETF-களில் உள்ள முதலீட்டை குறைத்து, ஈக்விட்டி பண்ட்கள் போன்ற மாற்று முதலீடுகளுக்கு மாறுவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில், சில்வர் ETF-கள் அதிக அபாயம் கொண்ட முதலீடாக மாறியுள்ளன. உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நிலையற்ற சூழலை உருவாகியிருக்கும் காரணத்தால், முதலீட்டாளர்கள் தங்கள் ரிஸ்க் அளவீட்டை குறைத்து முதலீட்டு நோக்கம் மற்றும் கால அளவை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என முதலீட்டு வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சில்வர் ETF சந்தையில் ஏற்பட்ட இந்த சரிவு, முதலீட்டாளர்களுக்கு முக்கியமான பாடமாக பார்க்கப்படுகிறது. குறுகிய கால லாபத்தை விட நீண்டகால பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் முதலீட்டு திட்டங்கள் இப்போது அவசியமாகின்றன. தற்போதைய சூழலில், சிந்தித்து செயல்படுவது மட்டுமே முதலீட்டாளர்களை இழப்பிலிருந்து காப்பாற்றும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/silver-etfs-crash-up-to-20-in-1-month-china-crackdown-global-outflows-new-sebi-valuation-rule-t-787599.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
