டிரம்ப்-ன் முட்டாள்தனம்.. பாப் அல்-மண்டப் நீரிணை மூடப்போகும் ஈரான்? அடுத்த ‘Big Warning’! | Iran Issues Major New Warning: Bab al-Mandab Strait Could Be Next After Hormuz – Ali Akbar Velayati warns

International

oi-Prasanna Venkatesh

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம், உலகளாவிய எரிபொருள் மற்றும் வர்த்தக அமைப்பை நேரடியாக பாதிக்கும் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனழே ஹார்மூஸ் நீரிணையை முடியுள்ள ஈரான் தற்போது Bab al-Mandab Strait நீரிணையை மூடப்போவதாக ஈரான் தரப்பில் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இது சர்வதேச சந்தைகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஈரான் அரசும், ராணுவமும் ஹார்மூஸ் நீரிணை மீது மட்டுமே கவனம் செலுத்த வந்த நிலையில், தற்போது பாப் அல்-மண்டப் நீரிணையும் கட்டம் கட்ட துவங்கியுள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி-யின் ஆலோசகரான அலி அக்பர் விலாயதி, இந்த நீரிணையும் ஹார்முஸ் போலவே முக்கியமான டார்கெட் ஆக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

iran war Trump Bab al-Mandab Strait Ali Akbar Velayati Mojtaba Khamenei - Bab al-Mandab Strait Threat Iran Warns Bab al-Mandab Velayati Bab al-Mandeb Warning Iran Red Sea Threat 2026 Global Oil Supply Disruption Bab al-Mandab Strait Iran threat Iran Bab al-Mandeb warning Ali Akbar Velayati statement Mojtaba Khamenei advisor warning Bab al-Mandab next Hormuz Red Sea strait closure threat global oil supply disruption 2026 7 million barrels Bab al-Mandab 22 percent container trade risk Trump Iran escalation Bab al-Mandab oil prices surge Bab al-Mandeb Gate of Tears strait Iran Axis of Resistance Bab al-Mandab US mistakes Iran warning 25 million barrels daily oil offline 7 22 25

முக்கிய எக்ஸ் பதிவு
அலி அக்பர் விலாயதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தக போக்குவரத்தை மொத்தமாக பாதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும், “அமெரிக்காவின் வெள்ளை மாளிகை (White House) மீண்டும் முட்டாள்தனமான நடவடிக்கைகளை தொடர்ந்தால், உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தக போக்குவரத்தை ஒரேயொரு சிக்னலால் முடக்க முடியும் என்பதை அவர்கள் விரைவில் உணர்வார்கள்” என்று அவர் எச்சரித்தார்.

இதோடு ஹார்மூஸ் வழித்தடத்தில் எப்படி ஈரான் ராணுவம் முடக்கியுள்ளதோ அதேபோல் பாப் அல்-மண்டப் நீரிணையும் முடக்க முடியும் என அலி அக்பர் விலாயதி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

7 மில்லியன் பேரல் ஆபத்து
பாப் அல்-மண்டப் நீரிணை வழியாக தினமும் சுமார் 7 மில்லியன் பீரல் எண்ணெய் உலக சந்தைகளுக்கு சென்றடைகிறது. இந்த பாதை தடைசெய்யப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்பு உருவாகும் அபாயம் உள்ளது.

இந்த சிறிய நீரிணை வழியாக ஆண்டுதோறும் கடல் வழியாக சரக்கு வர்த்தகத்தில் சுமார் 22% பயணிக்கிறது. இதனால், இது எண்ணெய் மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்துக்கும் முக்கியமான வழித்தடமாக உள்ளது. இதை ஈரான் மூடினால் பெரும் பாதிப்பு உலக நாடுகள் சந்திக்கும்.

பாப் அல்-மண்டப் பாதை
‘கண்ணீரின் கதவு’ (Gate of Tears) என அழைக்கப்படும் இந்த பாப் அல்-மண்டப் நீரிணை, யெமன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜிபூட்டி இடையே அமைந்துள்ள வெறும் 20 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு குறுகிய கடல் வழித்தடமாகும். இது செங்கடலை Gulf of Aden வழியாக இணைத்து, பின்னர் Suez Canal மூலம் ஐரோப்பா – ஆசிய வர்த்தகத்தை இணைக்கிறது. இந்த பாதை ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய பகுதியை இணைக்கும் முக்கிய துறைமுக வழியாகவும் செயல்படுகிறது.

மேலும் இந்த நீரிணை உலகளாவிய வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே செல்லும் கப்பல்களுக்கு இது முக்கிய கடல் வழித்தடமாக செயல்படுகிறது. மேலும், இது செங்கடலின் தெற்கு நுழைவாயிலாக இருந்து, மத்திய தரைக்கடல்-ஐ (Mediterranean Sea) இந்கிய பெரும்கடலுடன் இணைக்கும் முக்கிய இணைப்புப் பாதையாகவும் விளங்குகிறது.

iran war Trump Bab al-Mandab Strait Ali Akbar Velayati Mojtaba Khamenei - Bab al-Mandab Strait Threat Iran Warns Bab al-Mandab Velayati Bab al-Mandeb Warning Iran Red Sea Threat 2026 Global Oil Supply Disruption Bab al-Mandab Strait Iran threat Iran Bab al-Mandeb warning Ali Akbar Velayati statement Mojtaba Khamenei advisor warning Bab al-Mandab next Hormuz Red Sea strait closure threat global oil supply disruption 2026 7 million barrels Bab al-Mandab 22 percent container trade risk Trump Iran escalation Bab al-Mandab oil prices surge Bab al-Mandeb Gate of Tears strait Iran Axis of Resistance Bab al-Mandab US mistakes Iran warning 25 million barrels daily oil offline 7 22 25

யெமன் நாட்டின் தலையீடு
2026 மார்ச் இறுதியில், யெமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா மோதலில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்த தொடங்கியுள்ளனர்.

ஈரான் வழிநடத்தும் “Axis of Resistance” கூட்டணியின் ஒரு பகுதியாக செயல்படும் ஹூதிகள், இந்த மோதலில் நான்காவது முனையை தாக்குதலை திறந்துள்ளனர். இதன் மூலம், செங்கடல் வழி கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலக வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்பட்ட துவங்கியுள்ளது. ஈரான் தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துணையுடன் பாப் அல்-மண்டப் மூட திட்டமிட்டு வருகிறது.

இந்த புதிய எச்சரிக்கை, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்து, பிராந்திய அளவில் பெரிய போராக மாறும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது.

இரண்டு முக்கிய நீரிணைகள்
பாப் அல்-மண்டப் மற்றும் ஹார்முஸ் நீரிணைகள் இரண்டும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டால், தினமும் சுமார் 25 மில்லியன் பேரல் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உலக சந்தைகளில் எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தக்கூடிய சூழலை உருவாக்குகிறது.

சந்தை மதிப்பீடுகளின்படி, இந்த நிலை நீடித்தால் எண்ணெய் விலை பேரலுக்கு 120 டாலருக்கும் மேல் உயரக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.

iran war Trump Bab al-Mandab Strait Ali Akbar Velayati Mojtaba Khamenei - Bab al-Mandab Strait Threat Iran Warns Bab al-Mandab Velayati Bab al-Mandeb Warning Iran Red Sea Threat 2026 Global Oil Supply Disruption Bab al-Mandab Strait Iran threat Iran Bab al-Mandeb warning Ali Akbar Velayati statement Mojtaba Khamenei advisor warning Bab al-Mandab next Hormuz Red Sea strait closure threat global oil supply disruption 2026 7 million barrels Bab al-Mandab 22 percent container trade risk Trump Iran escalation Bab al-Mandab oil prices surge Bab al-Mandeb Gate of Tears strait Iran Axis of Resistance Bab al-Mandab US mistakes Iran warning 25 million barrels daily oil offline 7 22 25

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி
இதற்கிடையில், ஹார்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா முன்வைத்த தற்காலிக போர்நிறுத்த கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துள்ளது. இது பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பாப் அல்-மண்டப் நீரிணை மீது உருவாகியுள்ள இந்த புதிய பதற்றம், உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கும், சரக்கு வர்த்தகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஹார்முஸ் மற்றும் பாப் அல்-மண்டப் ஆகிய இரண்டு முக்கிய கடல் வழித்தடங்களும் ஈரான் கட்டுப்பட்டிற்கு சென்று போக்குவரத்து பாதிக்கப்படுமானால், இதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது நிபுணர்கள் கருதுகின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-issues-major-new-warning-bab-al-mandab-strait-could-be-next-after-hormuz-ali-akbar-velayati-787501.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo