தங்க விலை 16 வருடத்தில் மிக பெரிய சரிவு! அடுத்து என்ன நடக்கும்? முதலீட்டாளர்களுக்கு மேஜர் எச்சரிக்கை | Gold: Gold Tumbles to 16 year low! What’s Next for the Market? Critical warning for Investors

Business

-Hema Vandhana

வாஷிங்டன்: உலக சந்தையில் கடந்த ஒரு மாத காலத்தில் தங்கம் விலை சுமார் 14 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சி இதுவாகும்.,., என்ன நடந்தது? இதுகுறித்து சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை உச்சத்தில் இருந்த தங்கம், இப்போது சரிவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள்.. இதற்கு பின்னால் பல முக்கிய பொருளாதார காரணங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

124026703 1 jpg 1775225788818 1775225665316

அமெரிக்க டாலரின் மதிப்பு

குறிப்பாக அமெரிக்க டாலரின் மதிப்பு உலக அளவில் வலுவடைந்து வருவது தங்கம் விலை வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் டாலர் மதிப்பிலேயே வர்த்தகம் செய்யப்படுவதால், டாலர் மதிப்பு உயரும்போது மற்ற நாட்டு பணத்தைக் கொண்டு தங்கம் வாங்குவது செலவுமிக்க ஒன்றாக மாறுகிறது. இது தங்கத்திற்கான தேவையைக் குறைத்து அதன் விலையையும் கீழே தள்ளுகிறது.

தங்கம் விலை சரிவிற்கு இன்னொரு மெயின் காரணம் அமெரிக்காவின் வட்டி விகித கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாகும். அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

தங்கத்தின் மீதான முதலீடு

பொதுவாக வட்டி விகிதம் குறைந்தால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும். ஆனால் தற்போது நிலவும் உலகளாவிய பதற்றங்கள் மற்றும் பணவீக்க அச்சம் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் தாமதம் செய்யலாம் அல்லது இப்போதைக்கு குறைக்காமல் இருக்கலாம் என்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.

வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வதை விடுத்து, வட்டி லாபம் தரும் மற்ற நிதிச் சார்ந்த திட்டங்களுக்குத் தங்களின் கவனத்தைத் திருப்புகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான மோகம் குறைந்து விற்பனை அதிகரித்து விலை சரிந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை

தங்கத்தின் விலை குறைந்தாலும் மற்றொரு புறம் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை இந்த ஒரே மாதத்தில் சுமார் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இது உலக அளவில் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதால், நிலைமையைச் சமாளிக்க வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணமாகிறது.

அதேபோல, தங்கத்தை போலவே வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் போன்ற மற்ற விலை உயர்ந்த உலோகங்களின் விலைகளிலும் பயங்கரமான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த உலோகங்கள் அனைத்தும் இப்போது ஒருவிதமான நிலையற்ற தன்மையிலேயே இருந்து வருகின்றன.

முதலீட்டாளர்கள் அலர்ட்

முதலீட்டாளர்களை பொறுத்தவரை ஒரு குழப்பமான சூழல் நிலவுவதாக தெரிகிறது.. தங்கம் விலை குறைந்தாலும் அது இன்னும் சில காலம் ஊசலாட்டத்துடனேயே இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கிறார்களள்.. அதாவது வட்டி விகிதங்கள் எப்போது குறையும் என்பது குறித்த தெளிவான தகவல் கிடைக்கும் வரை இந்த ஏற்ற இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளதாம்.

அதனபால் இந்த சூழலில் தங்களின் மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் போடாமல், பல பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தங்கம் எப்போதும் நீண்ட கால அடிப்படையில் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், தற்போதைய குறுகிய கால மாற்றங்கள் உலக அரசியலையும் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் சார்ந்தே இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது என்று அட்வைஸ் தருகிறார்கள் நிபுணர்கள்…!!

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-gold-trumbles-to-16-year-low-whats-next-for-the-market-crical-warning-for-investors-011-786905.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo