
Business
oi-Vigneshkumar
சென்னை: நாம் அனைவரும் ஆண்டுக் கணக்கில் நினைத்தது இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சரிவு எந்தளவுக்கு நீடிக்கும் என்பதே இப்போது மக்களிடையே உள்ள குழப்பமாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை சரிவுக்கான காரணத்தை விளக்கிய ஆனந்த் சீனிவாசன், அது எந்தளவுக்குச் சரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்கியுள்ளார்.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து சரிந்து வருகிறது. இப்படி தங்கம் விலை சரியாதா என்றே மக்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இப்போது தங்கம் விலை சரிய ஆரம்பித்துவிட்ட சூழலில், இது எந்தளவுக்குச் சரியும் என்பதே இப்போது மக்களிடம் இருக்கும் அடுத்த கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “இப்போது இருக்கும் சூழலில் தங்கத்தை நாம் பொறுமையாகக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க வேண்டும். டிரம்ப் என்ன செய்வார் என யாருக்குமே தெரியாது. ஒரு பக்கம் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு ரெடி எனச் சொல்கிறார். மறுபுறம் ஈரானோ டிரம்ப் வீழ்ந்துவிட்டார் எனச் சொல்கிறார். பேச்சுவார்த்தை நடந்தாக டிரம்ப் சொல்வதை ஈரான் திட்டவட்டமாக மறுக்கிறது. அதாவது உள்நாட்டு அழுத்தத்தை டிரம்பால் கையாள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது. டிரம்ப் நினைத்தது போல ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை. போர்க் கையை மீறிச் செல்கிறது.
போரில் அமெரிக்கர்கள் உயிரிழக்கிறார்கள். இதனால் டிரம்ப் மீதான அமெரிக்கர்கள் கோபத்தை அதிகரிக்கிறது. இதை எல்லாம் மனதில் வைத்தே போரை நிறுத்த டிரம்ப் முயல்கிறார். ஹார்முஸை தனது கண்ட்ரோலில் எடுக்க அமெரிக்கா பார்க்கிறது. ஆனால், ஈரான் எல்லாம் அதற்கு விட்டுத் தராது. பங்குச்சந்தையை ஏமாற்றவே டிரம்ப் பொய்களைச் சொல்கிறார் என்பது போலத் தெரிகிறது.
டாலரும் தங்கமும்
கச்சா எண்ணெய் எப்போதும் டாலரில் தான் விற்பனை செய்யப்படும். இதனால் டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் விலை குறையும். இதான் யூனிவர்சல் ரிலேஷன்ஷிப். போர் எப்படி இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை போர் தொடரும் என்றே நினைக்கிறேன். ஈரானுக்கு எதாவது விட்டுத் தர வேண்டும். அப்போது தான் அமெரிக்காவே நினைத்தாலும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரும்.
போரால் கச்சா எண்ணெய் விலை குறையாது. கச்சா எண்ணெய் விலை இப்படி இருந்தால் குறுகிய காலத்தில் தங்கத்திற்குச் சிக்கல் தான். ஒரு கிராம் தங்கம் ரூ.12500 வரை போகலாம் என்றேன். இப்போதுள்ள சூழலை வைத்துப் பார்த்தால் அது உடையலாம்.. அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 22 கேரட் தங்கம் ரூ.11,000 வரைக்கும் போறதுக்கு சான்ஸ் இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும்!
போர் முடிந்தாலும் அமெரிக்காவில் பணவீக்கம் வர வாய்ப்பு இருக்கிறது. அப்படி வந்தாலும் தங்கம் விலை ஏறும். அப்போது அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் மட்டுமே தங்கம் விலை குறையும். எனவே அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கம் விலை குறையலாம்.. அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தங்கம் விலை ஒரு பெரிய சரிவைச் சந்திக்கும். அதன் பிறகே ஏற ஆரம்பிக்கும்.
இந்த சரிவின் கடைசிக்கட்டத்தில், அதாவது தங்கம் விலை குறைந்தபட்சமாக இருக்கும்போது வாங்குவேன் என மக்கள் நினைப்பார்கள். ஆனால், அப்படி குறைந்தபட்ச ரேட்டில் தங்கம் வாங்க முடியாது. சீனா தன்வசம் இருக்கும் டாலரை விற்றுத் தங்கத்தை வாங்க ஆரம்பிக்கும். இதனால் தங்கம் விலையின் சரிவு எந்தளவுக்கு நீடிக்கும் என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.
ரூ.10,000 வரை போகலாம்
ஆக மொத்தம் தங்கம் விலை குறுகிய காலத்தில் சரிந்தாலும் நீண்ட கால நோக்கில் ஏறவே செய்யும். இந்த சரிவில் தங்கம் விலை எந்தளவுக்குக் குறையும் என்பதை யாராலுமே துல்லியமாகச் சொல்ல முடியாது. ரூ.11,000 வரைக்கும் போதும். ரொம்பவே பெரிய போராக மாறினால் ரூ.10,000 வரைக்கும் கூட போகலாம். ஆனால், போர் எந்தளவுக்குப் போகும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் டிரம்ப் என்ன செய்வார் என்பதை யாராலுமே சொல்ல முடியாது” என்றார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-rate-might-fall-future-as-middle-east-tension-continues-explains-expert-anand-srinivasan-784425.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


