முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் | BJP shock for Nitish Kumar: Harivansh Singh again got Rajya Sabha seat through President Nomination

India

oi-Vigneshkumar

பாட்னா: பீகார் அரசியலில் எப்போதுமே ‘கிங் மேக்கராக’ இருக்கும் நிதிஷ் குமாருக்கே, பாஜக அடுத்தடுத்து அதிர்ச்சியைக் கொடுத்து வருகிறது. முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்யவுள்ள நிலையில், இப்போது பாஜக மற்றொரு பெரிய ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ வைத்துள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் எம்பி சீட் தர மறுத்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு ஜனாதிபதி பரிந்துரை மூலம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி நிதிஷுக்கு பாஜக ஷாக் கொடுத்துள்ளது.

பீகார் மாநிலம் என்பது இப்போது பாஜகவுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் ஆர்ஜேடி, ஜேடியு என பிராந்தி கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய இந்த மாநிலம் இப்போது மெல்ல பாஜக கைக்குள் வருகிறது. ஜேடியு மூலம் அங்கு முதலில் கூட்டணி ஆட்சியை அமைத்த பாஜக, இப்போது சரியான நேரத்தில் நேரடியாக கண்ட்ரோலை எடுக்கப் பார்க்கிறது. இதனால் அங்கு நிதிஷுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

BJP shock for Nitish Kumar Harivansh Singh again got Rajya Sabha seat through President Nomination

என்ன மேட்டர்

அதாவது மூத்த பத்திரிகையாளரான ஹரிவன்ஷ் நாராயண் சிங், நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை மாறியது. 2022ல் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி- காங்கிரஸ் உடன் கை கோர்த்தார். இருப்பினும், அப்போதும், ஹரிவன்ஷ் மட்டும் பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டினார்.

குறிப்பாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை ஜேடியு புறக்கணித்தபோதும், ஹரிவன்ஷ் அதில் கலந்துகொண்டது நிதிஷ் குமாரை உச்சக்கட்ட கோபத்திற்கு உள்ளாக்கியது. அதன் பிறகும் நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்தாலும் ஹரிவன்ஷை தள்ளியே வைத்திருந்தார். இந்தச் சூழலில் தான் ஹரிவன்ஷின் ராஜ்யசபா பதவிக்காலம் ஏப்ரல் 9ம் உடன் முடிந்த நிலையில், அவருக்கு சீட் கொடுக்க நிதிஷ் மறுத்துவிட்டார்.

நிதிஷ்

ஹரிவன்ஷ் சிங்கிற்கு பதிலாக, கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க நிதிஷ் குமார் முடிவு செய்தார். பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் கிடைத்த எம்எல்ஏக்கள் நம்பர்கள் அடிப்படையில் ஜேடியுவுக்கு இரு எம்பிக்கள் கிடைத்தன. அதில் தனது ஒரு இடத்தில் ஜேடியு சார்பில் ராம் நாத் தாக்கூர் போட்டியிட்டார். மற்றொரு இடத்தில் கட்சி தலைவரான நிதிஷ் குமார் நேரடியாகப் போட்டியிட்டார்.

முதல்வர் பதவியும் போச்சு

ஆம், நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியைத் துறந்துவிட்டு, டெல்லி அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்தார். பீகார் சட்டசபை, மேலவை. நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா என நான்கிலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் பீகார் இரு அவைகளிலும், லோக்சபாவிலும் ஏற்கனவே உறுப்பினராக இருந்துவிட்டதால் இப்போது ராஜ்யசபாவுக்கு செல்வதாக நிதிஷ் கூறினார். அவர் பொதுவெளியில் இப்படிச் சொன்னாலும் பாஜக அழுத்தம் காரணமாகவே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஹரிவன்ஷ் விவகாரத்திலும் நிதிஷுக்கு பாஜக அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பாஜக அனுப்பும் மெசேஜ்

நிதிஷ் குமார் கைவிட்டாலும், தங்களுக்கு விசுவாசமாக இருந்த ஹரிவன்ஷ் சிங்கை கைவிட பாஜக விரும்பவில்லை. இலக்கியம் மற்றும் பத்திரிகைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் காரணம் காட்டி, ஜனாதிபதி மூலம் நியமிக்கப்படும் எம்.பி பிரிவில் அவருக்கு சீட் வாங்கித் தந்துவிட்டது பாஜக! இதன் மூலம் நிதிஷ் குமாரின் ஆதரவு இல்லாமலேயே ஹரிவன்ஷால் எம்.பி-யாக நீடிக்க முடியும். மேலும், பாஜகவை நம்பி வருபவர்களை எப்போதும் கட்சி கைவிடாது என்கிற மெசேஜ் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்றடைந்துள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/bjp-shock-for-nitish-kumar-harivansh-singh-again-got-rajya-sabha-seat-through-president-nomination-788659.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo