
International
oi-Vignesh Selvaraj
கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாட்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் புதன்கிழமையை கூடுதலாக பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது இலங்கை அரசு.

மருத்துவம், துறைமுகங்கள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து, பிற அனைத்துத் துறைகளும் வாரத்தின் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக இருக்கும் என்றும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாகனங்களுக்கு கியூஆர் கோடு கட்டாயம் என மார்ச் 15 அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவிவரும் போர்ப் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள், எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி இலங்கையிலும் பலதரப்பட்ட மக்கள் சமையல் எரிவாயுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் நெருக்கடியை சமாளிக்கும் வகையில், எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிக்க வாகனங்களுக்கு கியூஆர் கோடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது, QR Code முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த முறையை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக, இலங்கை எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இலங்கையில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி மருத்துவத் துறை, சுங்கத்துறை, குடிநீர், துறைமுகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் மட்டுமே அனைத்து நாள்களும் இயங்கும் என்றும், மற்ற துறைகள் 4 நாள்கள் மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூர்களிலும் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் துறைகளும் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/sri-lanka-cuts-work-week-to-four-days-as-west-asia-tensions-rise-781939.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
