வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? | IANS Matrize Opinion Poll Predicts TMC Return in Bengal, BJP to Retain Assam

India

oi-Vignesh Selvaraj

டெல்லி: 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் ( Matrize-IANS) இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அசாமில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அட்டவணையை, தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் இன்று அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

IANS Matrize Opinion Poll Predicts TMC Return in Bengal BJP to Retain Assam

5 மாநில சட்டசபை தேர்தல்

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்திலும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 152 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி, 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் ( Matrize-IANS) இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், ஆளும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி 114 முதல் 127 இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களையே பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் விஜய்யின் தவெக 6 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என்று அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி?

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 96 முதல் 98 இடங்களுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 26 முதல் 28 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் இழுபறி

140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவைப் பொறுத்தவரை, ஆட்சியைப் பிடிப்பதில் இழுபறி நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 61 முதல் 71 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 58 முதல் 69 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 12 -13 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், 2 இடங்கள் வரை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் கருத்துக்கணிப்பு முடிவுகள்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 294 இடங்களில் 155 முதல் 170 இடங்கள் வரை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த முறை மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு அதீத வளர்ச்சி இருக்கும் கூறப்பட்டுள்ளது. பாஜக 100 முதல் 115 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பாஜக அங்கு 77 இடங்களில் வென்றிருந்தது. ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 முதல் 5 இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/ians-matrize-opinion-poll-predicts-tmc-return-in-bengal-bjp-to-retain-assam-781637.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo