வைபவ் சூர்யவன்ஷியை இப்படி விமர்சிக்கலாமா.. தரக்குறைவாக பேசிய ஆர்சிபி வீரர்! இதெல்லாம் ஒரு பிரச்சனையா | RCB: Vaibhav Suryavanshi is not professional and He is eating ice cream in the night time says RCB wicket keeper Jitesh Sharma ahead of IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஜித்தேஷ் சர்மா 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை தரக்குறைவாக பேசி விமர்சித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட்டருக்கான ஒழுங்குடன் நடக்க வேண்டும் என்று கூறியுள்ள ஜித்தேஷ் சர்மா, இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை சாடியுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. இம்முறை ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் தலைமையில் களமிறங்க உள்ளது. இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மீதுதான் ரசிகர்களின் கண்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டிலேயே மிகப்பெரிய சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இன்னும் மெருகேறி இருக்கிறார்.

RCB

இதனிடையே இந்திய ஏ அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடிய போது, அவரின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டார். வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரின் போது ஜித்தேஷ் சர்மா அவுட்டாகி இந்திய அணியை தோல்வி அடைய வைத்தார். அப்போது ஓய்வறையில் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி சரமாரியாக ஜித்தேஷ் சர்மாவை திட்டினார்.

இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஜித்தேஷ் சர்மா பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி இன்னும் தொழில்முறை கிரிக்கெட் வீரராக வளரவில்லை. அவர் இன்னும் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அவரை சுற்றி இருப்பவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் குணங்கள் அவ்வளவு எளிதாக மாறாது என்றே நினைக்கிறேன்.

களத்தில் இருக்கும் போது வைபவ் சூர்யவன்ஷி ஒழுக்கத்துடன் இருக்கிறார். அதனை பற்றி நான் பேசப் போவதில்லை.. ஆனால் இரவு நேரத்தில் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கொஞ்சமாக ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்பதை உணர்வார்.

ஆனால் 15 வயது சிறுவனாக இருக்கும் போதே வைபவ் சூர்யவன்ஷியிடம் சீனியர் வீரர்களுக்கு நிகரான ஃபிட்னஸ் மற்றும் டயட் கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஜித்தேஷ் சர்மாவின் விமர்சனத்தை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அவர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்றும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/rcb-vaibhav-suryavanshi-is-not-professional-and-he-is-eating-ice-cream-in-the-night-time-says-rcb-w-783993.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo