அகீல் ஹொசைன், ஓவர்டன், குர்ஜப்னீத் சிங்.. சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் கட்டாயம்.. செய்வாரா ருதுராஜ்? | CSK: CSK team have to make 3 changes in the playing xi including Akeal Hossein, Overton and Dewald Brevis against RCB in the IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் அகீல் ஹொசைன், ஜேமி ஓவர்டன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அகீல் ஹொசைனால் எளிதாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, நூர் அஹ்மத் கொஞ்சம் ஃபார்முக்கு வந்தால் சின்னசாமி மைதானத்தில் மேஜிக் நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய இரவு நேர போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை ஆடியுள்ள 2 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

CSK

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக பிரசாந்த் வீர் இடத்தில் அகீல் ஹொசைன் சேர்க்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ராகுல் சஹருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக குர்ஜப்னீத் சிங் சேர்க்க வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்னீத் சிங் பெங்களூர் மைதானத்தில் நிச்சயம் பயன் அளிப்பார் என்று பேசத் தொடங்கியுள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரை டிவால்ட் பிரெவிஸ் பேட்டிங் மட்டும் ஆட தயாராகிவிட்டால், கார்த்திக் சர்மாவின் இடத்தில் அவரை விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கார்த்திக் சர்மாவுக்கு இரு வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அவர் சிறப்பாக ஆடவில்லை.

கடந்த போட்டியில் நூர் அஹ்மத் மற்றும் மேட் ஹென்ரி மட்டுமே வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்தப் போட்டியில் அகீல் ஹொசைன் பிரெவிஸ் மற்றும் ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. மேட் ஹென்ரியை நீக்கிவிட்டு அவரது இடத்தில் குர்ஜப்னீத் சிங்கை கொண்டு வர வேண்டும்.

இதன் மூலமாக சிஎஸ்கே அணி 8 பேட்ஸ்மேன்கள், 6 பவுலர்கள் என்று களமிறங்க முடியும். அதேபோல் பிரெவிஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் வைத்து மிடில் ஆர்டரை வலுப்படுத்த முடியும். இந்தப் போட்டியில் மட்டும் சிஎஸ்கே அணி வென்றுவிட்டால், எளிதாக வெற்றிக்கான ஃபார்முலாவை கண்டுபிடிக்க முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-csk-team-have-to-make-3-changes-in-the-playing-xi-including-akeal-hossein-overton-and-dewald-b-787261.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo