
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இங்கிலாந்து அணியின் சாம் கரணின் விக்கெட்டை வீழ்த்திவிட்டதாக நினைத்து சாக்ஷி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த போது, அது அவுட் இல்லை என்று இந்திய ஜாம்பவான் தோனி அவரை அமைதிபடுத்திய வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி தரமான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை குவித்தது. நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து நூலிழையில் தோல்வி அடைந்தது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் ஜேக்கப் பெத்தல் 48 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். இந்திய அணியின் வெற்றிக்கு பும்ராவின் பவுலிங்கும், அக்சர் படேலின் ஃபீல்டிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியை நேரில் காண ஏராளமான நட்சத்திரங்கள் குவிந்தனர். அதேபோல் இந்திய ஜாம்பவான் தோனி மற்றும் சாக்ஷியும் வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த ரோகித் சர்மா நேரடியாக தோனியை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடினார். தோனி மைதானத்தில் இருந்ததால், அவரின் பக்கம் கேமரா அடிக்கடி திரும்பியது.
இந்தப் போட்டியில் 18வது ஓவரை பும்ரா வீச வந்த போது ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. அந்த நேரத்தில் பும்ரா வீசிய யார்க்கர் பந்தை சமாளிக்க முடியாமல் சாம் கரண் டிஃபென்ஸ் விளையாட, அது நேராக பும்ராவின் கைகளுக்கு சென்றது. அந்த பந்து கிரண்டில் டச் ஆகி பும்ராவின் கைகளுக்கு சென்றது. இதனால் பும்ரா விக்கெட் வீழ்த்திவிட்டாரோ என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்தது.
அதனை நம்பி தோனியின் மனைவி சாக்ஷி கண்ணாடி அறையில் விக்கெட் என்று துள்ளிக் குதித்து கொண்டிருந்தார். ஆனால் தோனி அது விக்கெட் இல்லை.. பந்து பிட்சில் பட்டுதான் பும்ராவின் கைக்கு வந்தது என்று கூறி கிண்டல் செய்து அமைதிபடுத்தினார். இந்த வீடியோ நேரலையில் ஒளிபரப்பாகியதால், ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ms-dhoni-sakshi-thought-it-was-out-and-started-celebrating-but-thala-dhoni-calmed-her-down-and-tol-779033.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
