“அந்த” விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி | Man lost his life due to tablet Overdose: Girlfriend Flees Hospital After Dumping Body, Police probes

India

oi-Vigneshkumar

லக்னோ: காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இருப்பினும், அது ஓவர் டோஸாக போகவே அந்த நபர் உயிரிழந்தார். இதனால் பதறிய அந்த பெண் காதலனின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது அங்கு காதலியை ரகசியமாகப் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்து கிடந்தார். பாக்பத் என்ற பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர் தனது காதலியைப் பார்க்க புலந்த்ஷர் ஊருக்கு வந்துள்ளார்.

Uttar Pradesh

மாத்திரை

அப்போது அவர் பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்க மாத்திரைகளைச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், எந்தவொரு மருத்துவர் பரிந்துரையும் இல்லாமல் அளவுக்கு மீறிச் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது காதலி எனச் சந்தேகிக்கப்படும் பெண், சடலத்தை மாவட்ட மருத்துவமனையில் விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து கோட்வாலி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான அந்த பெண்ணைத் தீவிரமாகத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபதேபூர் புத்தி கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான வினோத் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காதலியைப் பார்க்க!

பஞ்சாபில் பணிபுரிந்து வந்த வினோத், அண்மையில்தான் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, தனது முதலாளிக்கு விபத்து ஏற்பட்டதாகவும், அங்குச் செல்ல வேண்டும் என்றும் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வினோத் கிராமத்தில் இருந்து கிளம்பியுள்ளார். ஆனால், மதிய நேரத்தில் வினோத்தின் செல்போனிலிருந்து அவரது சகோதரர் பிரதீப்பிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. வினோத்திற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக புலந்த்ஷருக்கு வருமாறும் அந்த பெண் சொல்லியுள்ளார்.

வினோத்தை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அந்த பெண், முதலில் அவர் தனது கணவர் என்றே சொல்லியுள்ளார். இருப்பினும், வினோத் உயிரிழந்துவிட்டதால் அப்பெண் பதறிப் போனார். மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், காவலர்கள் அங்குச் செல்வதற்குள் அப்பெண் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இப்போது அந்த பெண்ணை தேடும் பணிகள் தான் தீவிரமாக நடந்து வருகிறது.

ஹோட்டல் ரூமில் தனிமை

முதற்கட்ட விசாரணையில் வினோத்தும் அந்தப் பெண்ணும் முதலில் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த மாத்திரைகளை வினோத் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் மால்கா பூங்காவுக்குச் சென்றபோது, வினோத்தின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. நடந்த விஷயங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது வினோத் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

மருத்துவமனையில் உடலை விட்டுவிட்டு அந்த பெண் தப்பி ஓடியது, இந்த வழக்கின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. போலீசார் தற்போது அந்த பெண்ணை அடையாளம் கண்டு, அவர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வினோத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை

வினோத் குமாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகரக் காவல் ஆய்வாளர் பிரகர் பாண்டே கூறுகையில், “உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அந்த பெண்ணை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம். சீக்கிரமே எல்லா உண்மைகளும் தெரிய வரும்” என்றார்

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/man-lost-his-life-due-to-tablet-overdose-girlfriend-flees-hospital-after-dumping-body-police-probe-781105.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo