அமெரிக்க தாக்குதலில் பலியான ஈரான் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு.. சீனா ரூ.1.6 கோடி நிதியுதவி | China Announces $200,000 Aid After 150 Killed in Iran School Airstrike

International

oi-Halley Karthik

பெய்ஜிங்: அமெரிக்க சமீபத்தில் நடத்திய தாக்குதலில், ஈரானில் சுமார் 150 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.6 கோடியை நிவாரண உதவியாக சீனா வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது.

போர் காலங்களில் பள்ளி, மருத்துவமனைகள் மீது குண்டு வீசக்கூடாது என்பது சர்வதேச விதி. அதையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் அமெரிக்கா இந்த கொடுரத்தை செய்தது.

China

பள்ளி மீது தாக்குதல்

தெற்கு ஈரானில் மினாப், எனும் இடத்தில் சிறுமிகளுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியின் மீது அமெரிக்கா, திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில், 150 கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றன. நாங்களா? அப்படி ஒன்னும் தாக்குதலை நடத்தலியே என்று அமெரிக்கா இதனை மறுத்தது.

மட்டுமல்லாது, சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிவிட்டு.. சர்வதேச கவனத்தை திசை திருப்ப ஈரான் இப்படி செய்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் கொடூரம்

ஆனால், வெடித்து சிதறிய குண்டின் பாகங்களை ஆய்வு செய்தபோது அது அமெரிக்கா வீசிய குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சிறுமிகளுக்கு இரங்கல் தெரிவித்த சீனா, அவர்களின் குடும்பத்திற்கு சுமார் 2 லட்சம் டாலர் நிதியுதவியை அறிவிதிருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1.6 கோடிக்கு சமமாகும். சீன செஞ்சிலுவை சங்கம் மூலம் இந்த உதவி ஈரானுக்கு வழங்கப்படும்.

சீனா கடும் கண்டனம்

இந்த தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவோ ஜியாகுன் கூறுகையில், “பொதுமக்கள் மற்றும், ராணுவம் சாராத இடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை, சீனா கடுமையாக கண்டிக்கிறது. பள்ளிகளை குறி வைப்பதும், குழந்தைகளை காயப்படுத்துவதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இது மனிதநேயத்தின் எல்லை தாண்டி கொடூரம்” என்று சாடியுள்ளார்.

சர்வதேச வணிகம்

இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என்று ஈரான் கூறியுள்ளது. அமெரிக்கா இந்த விஷயத்தை ஆய்வு செய்து வருவதாக கூறியிருக்கிறது. ஆனால், அந்த பகுதியில் நாங்கள் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்று இஸ்ரேல் மறுத்திருக்கிறது.

ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டிருப்பதால், போரை நிறுத்தும் எண்ணத்தில் ஈரான் இல்லை. மறுபுறம் சர்வதேச வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/china-announces-200-000-aid-after-150-killed-in-iran-school-airstrike-781137.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo