அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! | Key Stage of Peace Talks: US Vice President Meets Pakistani Prime Minister

International

oi-Halley Karthik

இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்க இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமைதியை மீட்டெடுக்க அமைதி பேச்சுவார்த்தை நடபெற இருக்கிறது. இதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறது. தற்போது வேன்ஸ் பாக்., பிரதமரை சந்திருக்கிறார்.

இந்த சந்திப்பு, இரு தரப்பு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பதை தெரிவிக்கிறது. பேச்சுவார்த்தையில் ஈரான் வைக்கும் டிமாண்டுக்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளுமா? என்பதே கேள்விக்குறி.

US

அமெரிக்கா தரப்பில் வேன்ஸ், விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார், மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி ஆகியோரை சந்தித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த ஆர்வமாக இருப்பதாகவும் ஷெபாஷ் ஷெரிப் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

பேச்சுவார்த்தை எப்படி நடக்கும்?

ஈரான் குழுவும், அமெரிக்கா குழுவும் பாகிஸ்தான் வந்திருந்தாலும், இரு தரப்பினர் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடக்குமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதற்கு முன்னர் பாகிஸ்தான் மூலம்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை நடத்தின. எனவே, இந்த முறையும் இப்படித்தான் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், வேன்ஸ் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்திருப்பது, அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்பதை உறுதி செய்யவதை போல இருக்கிறது.

அதேபோல, ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையை ஸ்மூத்தாக நடத்த வேண்டும் எனில், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போதைய தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கும் சேர்த்து அமலாக்கப்பட வேண்டும் என்று ஈரான் கோரும் நிலையில், அதை அமெரிக்காவும், இஸ்ரேலும் மறுத்து வருகின்றன. எனவே பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு பாசிட்டிவாக செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/key-stage-of-peace-talks-us-vice-president-meets-pakistani-prime-minister-789071.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo