
Business
oi-Prasanna Venkatesh
மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் கச்சா எண்ணெய் பிஸ்னஸ், ஜியோ டெலிகாம் பிஸ்னஸ், ரீடைல் பிஸ்னஸ் இப்படி பல பிஸ்னஸ் செய்து வருவது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அம்பானி குடும்பம் பல வருடங்களாக பிரைவேட் ஜெட் பிஸ்னஸ் செய்து வருவது பலருக்கும் தெரியாத ரகசியமாக இருந்து வருகிறது.
ரிலையன்ஸ் கமர்ஷியல் டீலர்ஸ் லிமிடெட் என்ற சிறிய நிறுவனம் மூலம் இந்த வியாபாரம் நடைபெறுகிறது. வெளியில் பார்த்தால் இது ஒரு வணிக விமான சேவை, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம். ஆனால் உள்ளே பார்த்தால் இது அம்பானி குடும்பத்தின் சொந்த விமானப் படையாகவே செயல்படுகிறது.
ரிலையன்ஸ் கமர்ஷியல் டீலர்ஸ் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2025ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 1,100 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.

அம்பானியின் மாஸ்டர் மைண்ட்
தனிப்பட்ட முறையில் ஒரு பிரைவேட் ஜெட்டை வாங்கினால் இறக்குமதி வரியாக 25 சதவீதத்துக்கு மேல் வசூலிக்கப்படும். அதோடு அந்த ஜெட்டை வேறு யாருக்கும் வாடகைக்கு கொடுக்க முடியாது. ஆனால் ரிலையன்ஸ் கமர்ஷியல் டீலர்ஸ் நிறுவனம் அரசிடம் நான்-ஷெட்யூல்ட் ஆபரேட்டர் பெர்மிட் (NSOP) பெற்றுள்ளது. இதனால் ரிலையன்ஸ் குழுமம், ரிலையன்ஸ் கமர்ஷியல் டீலர்ஸ் நிறுவனத்தை ஒரு போக்குவரத்து நிறுவனமாகவும், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ரிலையன்ஸ் கமர்ஷியல் டீலர்ஸ் நிறுவனம் ஒரு பிரைவேட் ஜெட் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் வரி வெறும் 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை மட்டுமே. இந்த சலுகையைப் பயன்படுத்தி ஆர்சிடிஎல் பிரைவேட் ஜெட்களையும், விமானங்களையும் மலிவு விலையில் வாங்குகிறது.
பின்னர் அதே ஜெட்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுக்கிறது. இது டிரான்ஸ்பர் பிரைசிங் என்ற குழுமத்திற்குள்ளான பரிவர்த்தனை முறை. அதாவது பணம் ஒரு பாக்கெட்டில் இருந்து இன்னொரு பாக்கெட்டுக்கு மாறுகிறது. இதனால் வரி சேமிப்பு ஏற்படுகிறது.
500 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமானப் படை
ஆர்சிடிஎல் தற்போது 500 மில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வைத்துள்ளது. அம்பானி குடும்பத்துடன் தொடர்புடைய விமானங்களின் லிஸ்ட்.
பாம்பார்டியர் குளோபல் 7500 (VT-PRI), பாம்பார்டியர் குளோபல் 6000 (VT-HMA), எம்பிரேயர் ERJ-135 (VT-JMN), டசால்ட் ஃபால்கன் 900EX (VT-AKU), சிகார்ஸ்கி ஹெலிகாப்டர்கள் (VT-NMA) ஆகிய 5 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளது. இவற்றை அம்பானி குடும்பம் பயன்படுத்துவதை தாண்டி, ரிலையன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளும், வர்த்தக காரணங்களுக்காக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இவை அனைத்தையும் தாண்டி, ரிலையன்ஸ் ஒரு போயிங் 737-700 பிபிஜே (BBJ) விமானத்தையும் இயக்குகிறது. இது பறக்கும் அரண்மனை போன்றது.
மும்பை, ஜாம்நகர் விமான நிலையங்கள்
ரிலையன்ஸ் கமர்ஷியல் டீலர்ஸ் நிறுவன விமானங்கள் மற்ற பிரைவேட் ஜெட் போல் விமான நிலையத்தில் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. மும்பை விமான நிலையத்தில் தனி ஹேங்கர்கள் உள்ளன. ஜாம்நகர் விமான நிலையம் பாதுகாப்பு துறைக்கு சொந்தமானது என்றாலும், அங்கு உள்ள சிவில் பகுதியை ஆர்சிடிஎல் தான் கிட்டத்தட்ட நிர்வகிக்கிறது.
இந்த லாஜிஸ்டிக்ஸ் அமைப்பு ரிலையன்ஸ் தலைமைக்கு வேகமான போக்குவரத்து வசதியை தருகிறது. மூன்று கண்டங்களுக்கு மூன்று நாட்களில் சென்று வர முடியும் வாய்ப்பை அளிக்கிறது.
வியாபார உத்திக்கு
இந்த ஜெட் பயணங்கள் வெறும் ஆடம்பரம் அல்ல, தொழில்துறை உத்தி. அம்பானி வீட்டு விமானம் சீனாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு சென்றால், வால் ஸ்ட்ரீட் ஒரு பெரிய ஒப்பந்தம் உருவாகிறது என்பதை புரிந்துகொள்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா அல்லது கத்தார் நோக்கி பயணித்தால், பெரிய வியாபார ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பு இருப்பதை அனைவரும் அறிவர். இது முதலீட்டு சந்தையை இயக்கும் ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
அம்பானி குடும்ப விமானம் மட்டுமல்ல எலான் மஸ்க் விமான இயக்கத்தையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. டெக்சாஸ்-ல் இருந்து வாஷிங்டன் வந்தால் பெரிய விஷயம் நடக்க போகிறது என்பது பொருள், இதேபோல் சீனா, ஐரோப்பா, மெக்சிகோ என அவருடைய விமான இயக்கத்தை காண்காணித்து பங்குச்சந்தையில் ஆட்டம் காணும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/mukesh-ambani-rs-1-100-crore-private-jet-empire-how-rcdl-runs-reliances-tax-efficient-private-ai-789093.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
