அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் | Sanju Samson: Mumbai Indians Owner Ambani gave a big offer after Sanju Samson decided to move on from Rajasthan says his father Viswanath

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகும் முடிவை எடுத்த பின், மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரான அம்பானி குடும்பத்திடம் இருந்து மிகப்பெரிய ஆஃபர் வந்ததாக சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார். அதன்பின் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளில் இருந்தும் சஞ்சு சாம்சனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும், சிஎஸ்கே அணி கடைசியாகவே சீனில் வந்தது என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் நாயகனாக சஞ்சு சாம்சன் மாறி இருக்கிறார். இந்திய அணிக்காக ஹாட்ரிக் அரைசதம் விளாசி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை கொண்டாடி வருகின்றனர். இப்படியான சூழலில் சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார்.

Sanju Samson

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதில் மார்ச் 30ஆம் தேதி சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்திய அணியை எதிர்த்து சிஎஸ்கே அணிக்காக இம்முறை விளையாட இருக்கிறார்.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தந்தை விஸ்வநாத் அளித்துள்ள பேட்டியில், எனது மகனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் எல்லாவற்றையும் கொடுத்தது. அங்கு ஒரு ராஜாவை போல் பார்த்து கொண்டனர். தலையில் கிரீடம் மட்டும்தான் வைக்கவில்லை. ஆனால் காலம் போக போக, சஞ்சு சாம்சன் சில விஷயங்களை புரிந்து கொண்டார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு விருப்பம் உள்ளது என்பது தெரிந்தது. அப்போது என்னிடம் வந்து நாம் ராஜஸ்தான் அணியில் இருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார். ஏனென்றால் மும்பை ரஞ்சி அணியின் கேப்டன்சியை பெற ஜெய்ஸ்வால் தீவிரமாக இருக்கிறார். ரியான் பராக் ஏற்கனவே அசாம் அணியை வழிநடத்தி வருகிறார்.

அவர்கள் இருவருமே திறமையான வீரர்கள்.. அதனால் ராஜஸ்தான் அணியில் இருந்து காலம் தாழ்த்தாமல் வெளியேறுவது சிறந்த முடிவாக கருதினார்.. அந்த முடிவை எடுத்த பின், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளிடம் இருந்து மிகப்பெரிய ஆஃபர் வந்தது.. அப்போது சிஎஸ்கே அணி சீனிலேயே இல்லை..

ஆனால் எல்லாம் சரியாக அமைந்து, என் மகன் சிஎஸ்கே அணிக்காக ஆடப் போகிறார் என்று தெரிவித்துள்ளார். கேகேஆர் மற்றும் டெல்லி அணிகள் கேப்டன் பதவியை கொடுக்க முன் வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணியில் ஒரு வீரராகவே விளையாட சஞ்சு சாம்சன் முடிவு எடுத்து இணைந்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-mumbai-indians-owner-ambani-gave-a-big-offer-after-sanju-samson-decided-to-move-on-fro-780749.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo