
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் கல்யாணத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பங்கேற்காதது பேசுபொருளாகி இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமில் இருக்கும் சுப்மன் கில், அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்திற்கு வாழ்த்து கூறி கூட சோசியல் மீடியாவில் ஒரு பதிவை எழுதவில்லை.
இதனால் சாரா டெண்டுல்கர் – சுப்மன் கில் இடையில் பிரேக் அப் நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் பேத்தியான சானியா சந்தோக் இருவருக்கும் மும்பையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தனது சகோதரி சாரா டெண்டில்கரின் தோழியான சானியா சந்தோக்கை காதலித்து வந்த அர்ஜுன் டெண்டுல்கர், குடும்பத்தினரின் அனுமதியுடன் கரம் பிடித்துள்ளார்.

அதேபோல் அக்கா சாரா டெண்டுல்கருக்கு முன்னதாகவே அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமணம் நடைபெற்றது பேசுபொருளாகியது. இருப்பினும் சாரா டெண்டுல்கர் தற்போது மாடலிங் மற்றும் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
அனில் அம்பானி, நீடா அம்பானி, தோனி – சாக்ஷி, ரோகித் சர்மா – ரித்திகா, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், நெஹ்ரா, ஆமீர் கான், பிரித்வி ஷா, பியூஷ் சாவ்லா, யுவராஜ் சிங், சுனில் கவாஸ்கர், சேவாக், ஹர்பஜன் சிங், அபிஷேக் பச்சன் மற்றும் மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்றனர். ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மட்டும் பங்கேற்கவில்லை.
2021ஆம் ஆண்டு முதலே சுப்மன் கில் – சாரா டெண்டுல்கர் டேட்டிங் செய்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் கூட சாரா டெண்டுல்கர் முன்னிலையில் ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சுப்மன் கில்லை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அதேபோல் ஆஸ்திரேலியா டி20 தொடரின் போது சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க சாரா டெண்டுல்கர் நேரில் வந்திருந்தார்.
அதேபோல் சுப்மன் கில்லின் சகோதரியும், சாரா டெண்டுல்கர் நெருங்கிய நட்பில் இருக்கிறார்கள். அண்மையில் கூட இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் சச்சின் டெண்டுல்கரிடம் ஆலோசனை பெற்றதாக சுப்மன் கில் கூறி இருந்தார். இருப்பினும் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் சுப்மன் கில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு வாழ்த்து கூறி கூட சுப்மன் கில் எந்த பதிவையும் வெளியிடவில்லை.
இதனால் சுப்மன் கில் – சாரா டெண்டுல்கர் இடையில் பிரேக் அப் ஆனதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் சுப்மன் கில் ஐபிஎல் தொடருக்காக குஜராத் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார். அதேபோல் பஞ்சாப் சென்று தனது குடும்பத்தினருடனும் நேரம் செலவிட்டு வருவது தெரிய வந்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sara-tendulkar-absence-of-indian-team-captain-shubman-gill-from-the-wedding-of-sachin-tendulkars-s-779301.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
