ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் | Doomsday Fish Sighting In Mexico Sparks Concern, Will middle east crisis develop as World war 3

International

oi-Vigneshkumar

மெக்சிகோ சிட்டி: உலகில் இப்போது மத்திய கிழக்கில் மோதல் வெடித்துள்ளது. அந்த மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே டூம்ஸ்டே மீன் எனப்படும் ஓர்பிஷ் (Oarfish) மீன்கள் மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்டன. இதனால் மத்திய கிழக்கு மோதல் உலகப் போராக மாறுமோ என்ற விவாதம் எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் என்ன நிலைமை இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு ஈரான்- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே மோதல்கள் தொடர்கிறது. இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இதற்கிடையே டூம்ஸ்டே மீன் எனப்படும் ஓர்பிஷ் (Oarfish) மீன்கள் மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்டன.

Doomday middle east

டூம்ஸ்டே மீன்

அதில் ஒன்று இல்லை.. இரண்டு மீன்கள் கரையொதுங்கியது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 30 அடி வரை வளரக்கூடிய இந்த அரிதான உயிரினங்கள் எப்போதும் ஆழ்கடலில் தான் இருக்கும். மிக மிக அரிதாகவே மேலே வரும். ஆனால், இதுபோல மேலே வரும்போது எல்லாம் இயற்கை பேரழிவு ஏற்படுமாம். அதாவது இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என்பதற்கான சிக்னல் தான் இந்த டூம்ஸ்டே மீன்கள் என்கிறார்கள்.

மீன்

கடற்கரையில் இரண்டு சகோதரிகள் நடந்து சென்றபோது, தூரத்தில் ஏதோ மின்னுவதைப் பார்த்துள்ளனர். சாதாரணமாக 3,000 அடி ஆழத்தில் வாழும் ஓர்பிஷ் மீன்கள் ஆழமற்ற நீரில் தத்தளிப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சகோதரிகளில் ஒருவரான மோனிகா பிட்டிங்கர், ரிப்பன் போன்ற தோற்றமளிக்கும் இந்த மீன்களை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும், “அது மின்னி பிரகாசமாக இருந்தது. நாங்கள் அருகில் சென்று பார்த்தபோது, இது நிஜமாக இருக்க முடியாது எனத் தோன்றியது” என்று மோனிகா பிட்டிங்கர் தெரிவித்தார்.

தத்தளிப்பு

மோனிகாவின் சகோதரிக்கு மீன்கள் இதுபோல தத்தளிப்பதைப் பார்க்க முடியவில்லை. இதனால் அவர் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றார். “அங்கிருந்தோர் அனைவரும் சும்மா நின்றிருக்க, என் சகோதரி அந்த மீனை மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றார். ஆனால், அது என்னவென்று தெரியாததால் யாரும் உதவிக்கு வரவில்லை. பலரும் தயங்கினர், அவர்களை நான் குறை சொல்லமாட்டேன்,” என்றும் அவர் கூறினார்.

ஓர்பிஷ் மீன்கள் கிரில் உணவுகளை உண்பவை.. அரிதாகவே மேற்பரப்பிற்கு வரும். நிலநடுக்கங்கள், சுனாமிகள் போன்ற பேரழிவுகளுடன் இவை தொடர்புடையதாகக் கூறப்பட்டாலும், இவற்றின் தோற்றங்களுக்கும் இயற்கை பேரிடர்களுக்கும் இடையே உறுதியான அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உலகப் போர்

ஆனாலும், இந்த ஓர்பிஷ் வருகை ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. சிலர் இதை ஓர் அபசகுனமாகவும், மற்றவர்கள் ஒரு குறிப்பிடத்தக்க இயற்கை நிகழ்வாகவும் பார்க்கின்றனர். இன்னும் சிலரோ மத்திய கிழக்கில் மோதல் வெடித்துள்ள சூழலில், அது உலகப் போராகக் கூட மாறலாம் அதை உணர்த்தும் வகையிலேயே இந்த டூம்ஸ்டே மீன் வந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/doomsday-fish-sighting-in-mexico-sparks-concern-will-middle-east-crisis-develop-as-world-war-3-780427.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo