
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே எடுத்த முடிவு, தற்போது அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டி கொடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில், அதில் ரூ.460 கோடி ஷேன் வார்னேவின் பங்காக அவரின் குடும்பத்தினருக்கு செல்லவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் பல்வேறு அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று ராஜஸ்தான் அணி விற்பனை செய்யப்பட்ட தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான கல் சோமானி ராஜஸ்தான் அணியின் 100% பங்குகளை வாங்கி இருக்கிறார்.

இதனால் ராஜஸ்தான் அணி ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச லீக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. ஏனென்றால் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது ராஜஸ்தான் அணி ரூ.320 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 18 ஆண்டுகளில் இதன் மதிப்பு ரூ.15,300 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஆச்சரியம் ஒரு பக்கம் இருக்க, ஷேன் வார்னே கொடுத்துள்ள ஆச்சரியம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக ரூ.2 கோடிக்கு ஷேன் வார்னே வாங்கப்பட்டார். அப்போது போட்டி ஊதியம் உள்ளிட்டவையோடு ஷேன் வார்னேவின் ஊதியமாக ஆண்டுக்கு ரூ.2.34 கோடி பெற்றார்.
ஆனால் ராஜஸ்தான் அணியை நீங்களே நடத்துங்கள் என்று ஷேன் வார்னே அந்த அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அப்போது ஷேன் வார்னே பயிற்சியாளராகவும், இயக்குநராகவும் செயல்பட்டார். இப்படி செயல்பட ராஜஸ்தான் அணியிடம் எந்த சம்பளத்தையும் ஷேன் வார்னே வாங்கவில்லை. அதற்கு பதிலாக ஷேன் வார்னே ஆண்டுக்கு 0.75% பங்குகளை எனக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதனை ஏற்ற ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் 0.75% பங்குகளை அவருக்கு எடுத்து வைத்தனர். இதனால் 4 சீசன்கள் ஆடிய ஷேன் வார்னே 3% ராஜஸ்தான் ராயல்ஸ் பங்குகளை வைத்திருந்தார். தற்போது ராஜஸ்தான் அணி ரூ.15,300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில், ஷேன் வார்னேவின் பங்காக ரூ.460 கோடி அவரின் குடும்பத்தினருக்கு செல்லவுள்ளது.
ஷேன் வார்னே 2022ஆம் ஆண்டிலேயே உயிரிழந்தார். இருப்பினும் 18 ஆண்டுகளுக்கு முன் ஷேன் வார்னே எடுத்த முடிவு அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய வருமானமாக மாறி இருக்கிறது. இதனால் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஷேன் வார்னா நிதி விவகாரத்திலும் மாஸ்டர் மைண்ட் என்பதை நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/rajasthan-royals-australian-legend-shane-warne-family-to-earn-rs-460-crores-after-rajasthan-royals-784297.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
