இதுதான்டா AURA.. 19.5 பந்தில் சிவம் துபே கொடுத்த சிக்னல்.. மொத்த இந்திய அணியும் மிரண்டு போயிருச்சு! | T20 World Cup 2026: Shivam Dube scored 235 runs in just 8 innings in the T20 World Cup 2026 which shocks Indian fans across the globe

Cricket

oi-Yogeshwaran Moorthi

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே கடைசி ஓவரில் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கடைசி ஓவரின் 5வது பந்தில் திலக் வர்மா ஒரு ரன் எடுக்க ஓடி வந்த போது, சிவம் துபே வேண்டாம்.. திரும்பி போ என்று சிக்னல் காட்டிய சம்பவம் மொத்த இந்திய அணியையும் மிரள வைத்தது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் வெறும் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

T20 World Cup 2026

இந்தப் போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சம் 275 ரன்களுக்கு மேல் விளாசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் மோசமான ஷாட் விளையாடி ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி சுமார் 5 ஓவர்களை வரை கட்டுப்படுத்தியது. இப்படியான சூழலில் கடைசி ஓவரில் அதிக ரன்களை விளாச வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு வந்தது.

அப்போது ஜேம்ஸ் நீஷம் வீசிய கடைசி ஓவரில் சிவம் துபே 4, 6, 6, 4, 4 என்று 24 ரன்களை விளாசினார். அதிலும் 5வது பந்தில் சிவம் துபேவின் கால்களில் அடித்து பந்து ஓடியது. அப்போது திலக் வர்மா விரைவாக ஒரு ரன் எடுக்க ஓடி வந்தார். ஆனால் சிவம் துபே கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், திலக் வர்மாவை திரும்பி போக கூறினார். இது மொத்த இந்திய அணியையும், கம்பீரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதன்பின் கடைசி பந்தில் பவுண்டரியை விளாசி தள்ளினார். இதனால் மொத்த Momentumமும் இந்திய அணி பக்கம் திரும்பியது. ஒருவேளை டார்கெட் 220 ரன்களை ஒட்டி இருந்தால், நியூசிலாந்து அணி சேஸிங் செய்ய முயற்சித்திருக்கும். அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சிவம் துபே இந்திய அணியின் வெற்றிகளில் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார்.

ஏனென்றால் நம்பர் 5 பேட்டிங் வரிசைக்கு கீழ் இறங்கி வரும் சிவம் துபே மொத்தமாக 8 இன்னிங்ஸில் 235 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 5 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் கவர்ஸ் திசையில் சிவம் துபே அடித்த சிக்ஸ் பலரையும் மிரள வைத்துள்ளது. இதனால் சிவம் துபே ஒரு வீரராக வளர்ந்து கொண்டே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-shivam-dube-scored-235-runs-in-just-8-innings-in-the-t20-world-cup-2026-which-sh-779815.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo