
International
oi-Halley Karthik
மாஸ்கோ: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்தது. இந்நிலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்திருக்கிறது. இந்த விஷயத்தில் ரஷ்யா செய்திருக்கும் செயல், அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
விஷயம் ரொம்ப சிம்பிள். ரஷ்யாவிடமிருந்து நாம் எண்ணெய் வாங்கி வந்தோம். குறுக்கே வந்த அமெரிக்கா, ஆகாது.. ஆகாது இதெல்லாம் செட் ஆகாது என்று சொல்லி, ரஷ்ய எண்ணெய்க்கு 25% வரியை இந்தியா மீது போட்டது. வரி அழுத்தம் காரணமாக, நாம் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டோம்.

உண்மையான பிரச்சனை
அதற்கு பதில் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தோம். ஆனால், இங்குதான் உண்மையான பிரச்சனையே தொடங்கியது. ஈரான் விஷயத்தை அமெரிக்கா பற்ற வைத்திருப்பதால், மொத்த வளைகுடாவும் பற்றி எரிகிறது. எனவே நாம் எதிர்பார்த்த அளவுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை. இப்படியே போனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும். இது அமெரிக்காவுக்கு எதிரான கோபமாக மாறும்.
அமெரிக்காவின் வேலை
இந்த சூழலில்தான், அமெரிக்கா ஆஃபர் கொடுத்தது. அதாவது மார்ச் 5ம் தேதி தொடங்கி, ஏப்.4ம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம். இதனால் இந்தியாவுக்கு எந்த வரியும் போட மாட்டோம் என்று அமெரிக்கா சொன்னது. இதையெல்லாம் பார்க்கும்போது, அடடே அமெரிக்காவுக்கு எவ்வளவு தாராள மனசு என்று சொல்ல தோன்றும். ஆனால், இந்தியாவுக்கு இந்த நெருக்கடியை ஏற்படுத்தியதே அமெரிக்காதான் என்பது தனி கதை.
விஷயம் இப்படி இருக்கையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ரஷ்யா தனி பிளானை வைத்திருக்கிறது. அதாவது, நாங்கள் சப்ளை செய்யும் எண்ணெய்க்கு கணக்கு காட்ட மாட்டோம் என்று சொல்லிவிட்டது.
ரஷ்யாவின் பிளான்
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெய்கோவ் இது குறித்து கூறுகையில், “தீய எண்ணம் கொண்டவர்கள் அதிகம் இருப்பதால், பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக இந்த தகவல்களை நாங்கள் ரகசியமாக வைக்க முடிவெடுத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார். ரஷ்யா இப்படி சொன்னதற்கு பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் அமெரிக்கா விதித்த, விலை உச்சவரம்பு என்பதிலிருந்து ரஷ்யா தப்பிக்க இப்படி செய்கிறது.
ரஷ்யாவுக்கு லாபம்
அதாவது தற்போது உலகம் முழுவதும் எரிபொருள் கிடைப்பது சவாலாக மாறியிருக்கிறது. இந்த சான்ஸை பயன்படுத்தி, ரஷ்யா அதிக விலைக்கு எண்ணெய்யை விற்க கூடாது. குறிப்பிட்ட அளவு எரிபொருட்களை குறிப்பிட்ட அளவில்தான் விற்க வேண்டும். இதை மீறினால் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை பாயும் என்று கூறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. இதற்கு பெயர்தான் விலை உச்சவரம்பு.
இதிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில், எத்தனை கப்பல் கச்சா எண்ணெய்யை விற்கிறோம் என்பதை ரஷ்யா வெளியில் சொல்லமல் மறைக்க வெண்டும்.
இரண்டாவது காரணம், இந்தியாவுக்கு அதிக அளவில் எரிபொருளை விறக்கதான், கணக்கு காட்ட மட்டோம் என ரஷ்யா சொல்லியிருக்கிறது. இந்தியா அதிக அளவில் எரிபொருளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே ரஷ்யா எடுத்திருக்கும் முடிவு இந்தியாவுக்கு ரொம்பவும் சாதகமாக மாறியிருக்கிறது. இதன் மூலம் எதிர் வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/russia-s-silent-oil-routes-why-moscow-is-withholding-quantitative-data-on-shipments-to-india-779283.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
