இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் | Donald Trump deadline draws to close Iran callsyouth to form human chains around power plants

International

oi-Mani Singh S

தெஹ்ரான்: ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டின் மின் கட்டமைப்புகள், பாலங்கள் தகர்க்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்ப் விடுத்த கெடு முடிவடைய நிலையில், மின்கட்டமைப்புகளை பாதுகாக்க இளைஞர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவெ அதி நவீன ஏவுகணைகளை குவித்து தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், ஈரானின் பதிலடி நடவடிக்கையால் அங்கு உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு இறுதி கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் அந்த நாட்டை ஒரே நாளில் தகர்த்துவிடுவேன் எனவும் ஈரானில் உள்ள எண்ணெய் வளங்களை அமைரிக்கா கைப்பற்றும் என்றும் கூறினார்.

Donald Trump deadline draws to close Iran callsyouth to form human chains around power plants

பதிலடி கொடுக்க தயார்

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை நாங்களே கட்டுப்பாட்டில் எடுத்து அதற்கு சுங்க வரிகளை வசூலிப்போம் என்றும் டிரம்ப் அதிரடியாக தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் செவ்வாய்க்கிழமை ஈரானின் மின் சக்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த ஈரான், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியது.

இந்த நிலையில், ஈரானின் மின் நிலையங்களை பாதுகாக்க அந்த நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரான் விளையாட்டுத்துறை அமைச்சர் அந்நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில், ஈரானின் முக்கிய மின் நிலையங்களை சுற்றி மனித சங்கிலியாக கை கோர்த்து நின்று தங்கள் அடையாள ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் மனிதசங்கிலி

விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு இளைஞர்களும் 2 மணி முதல் அங்கு கூட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். டிரம்பின் இறுதி கெடு முடிவதற்கு 13 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் இந்த அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. வீடியோ மெசேஜில் ஈரான் இளைஞர் நலன் அமைச்சர் அலிரெசா ரஹிமி கூறுகையில், இளைஞர்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மனிதசங்கிலி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக இளைஞர்கள், இளம் கலைஞர்கள், இளைஞர் அமைப்புகள் ஆகியோர்தான் மின் நிலையங்களை சுற்றி நாங்கள் மனித சங்கிலியாக திரள்கிறோம் என்று கூறினர். நாட்டின் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற இளைஞர்களின் அர்ப்பணிப்பை இந்த முடிவு காட்டுகிறது” என்று கூறினார்.

மறைமுகமாக பேச்சுவார்த்தை?

அமெரிக்கா முன்மொழிந்த 45 நாள் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்த ஈரான், முற்றிலும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து இருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்றும் ஈரான் கூறியுள்ளது. கடந்த முறை பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டு இருந்தபோதே இருமுறை அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் கூறியுள்ளது.

ஒருபக்கம் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும் மற்றொரு பக்கம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பெயர் வெளியிட விரும்பாத ஈரான் அதிகாரியும் இதனை உறுதி செய்துள்ளார். பிராந்திய அதிகாரிகள் இருபக்கமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறினர். டிரம்பும் ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவே கூறி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/donald-trump-deadline-draws-to-close-iran-callsyouth-to-form-human-chains-around-power-plants-787771.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo