ஈரானின் முதுகில் குத்திய பாகிஸ்தான்.. டிரம்புக்கு தாராளம் காட்டி அமெரிக்காவுடன் சேர்ந்து செய்த செயல் | Pakistan betrayed Iran and giving bases to US for attack on Tehran

International

-Nantha Kumar R

இஸ்லாமாபாத்: ஈரானை தாக்க பாகிஸ்தான் தனது ராணுவ தளங்களை அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்கா ஈரானை தாக்கியதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக செயல்பட்டு வரும் நிலையில் தனது சுயலாபத்துக்காக அந்த நாடு ஈரானின் முதுகில் குத்தி உள்ளது.

pak pm and us donald trump jpg 1772883449542 1772883450430

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளன. இருநாடுகளும் ஈரான் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஈரானின் அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானும் உதவி செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அண்டை நாடு என்று கூற பாராமல் ஈரானின் முதுகில் பாகிஸ்தான் குத்தி உள்ளது. பாகிஸ்தானும், ஈரானும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இருநாடுகள் இடையே நல்லுறவு என்பது அவசியம்.

ஆனால் பாகிஸ்தானை அதனை மறந்து ஈரானை தாக்க அமெரிக்காவுக்கு உதவி செய்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தனது ராணுவ தளத்தை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிருந்து அமெரிக்கா, ஈரானை ட்ரோன்கள் மூலமாக தாக்கி ள்ளது.
இதனை இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில் இன்னும் சில முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது. அப்போதும் அமெரிக்காவுடன், பாகிஸ்தான் நெருக்கமாக செயல்பட்டு வந்தது. மேலும் அமெரிக்காவுக்கு சில உளவு தகவல்களை பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அரசு பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை பற்றி கவலைக்கொள்ளவில்லை. தனது நாட்டின் குறுகிய கால லாபத்துக்கு முன்னுரிமை வழங்கி அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. இதனால் அமெரிக்கா, அரபு நாடுகளின் நிலைப்பாட்டை அப்படியே பாகிஸ்தான் பின்பற்றி உள்ளது.

இந்த செயல் பாகிஸ்தான் – ஈரான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஈரான் மீது தாக்குதல் நடத்த சவுதி அரேபியா தான் டிரம்புக்கு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பிராந்திய அமைதி கேள்விக்குறியாகி உள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-betrayed-iran-and-giving-bases-to-us-for-attack-on-tehran-011-779389.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo