
International
oi-Prasanna Venkatesh
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமெரிக்கா நெருக்கமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்று தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, டிரம்ப் ஈரான் சமுதாயத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டிய பின்னர் இரு நாடுகளும் 24 மணிநேரத்திற்குள் நெருக்கமான பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக டிரம்ப் கூறியது உலக நாடுகளுக்கு வியப்பை அளித்துள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம்
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், ஈரான் “மிகவும் வெற்றிகரமான ஆட்சி மாற்றத்தை” சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றத்திற்கு பின்னர், அமெரிக்கா ஈரானுடன் இணைந்து பணியாற்றும் என்று அவர் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையே புதிய உறவு உருவாகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டியுள்ளார் டிரம்ப்.
அணு ஆயுத வளர்ச்சிக்கு முழு தடை
ஈரான் எதிர்காலத்தில் யுரேனியம் செறிவூட்டலை மேற்கொள்ளாது என்று டிரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், அணு ஆயுதம் தொடர்புடைய “ஆழமாகப் புதைக்கப்பட்ட அணு தூசு” அனைத்தையும் அமெரிக்கா ஈரானுடன் இணைந்து தோண்டி எடுத்து அகற்றும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் கண்காணிப்பு
ஈரான் அணுசக்தி நிலையம் தாக்குதல் நடைபெற்ற நாள் முதல் இப்பகுதியில் எந்தப் பொருளும் தொடப்படவில்லை என்று டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் விண்வெளிப் படை (Space Force) மூலம் மிகத் துல்லியமான செயற்கைக்கோள் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனால் ஈரானின் அணு நடவடிக்கைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
வரி மற்றும் வர்த்தக தடை பேச்சுவார்த்தை
டிரம்ப் மேலும் தனது பதிவில், ஈரானுடன் வரி மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான நிவாரணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சங்களில் பல ஏற்கனவே ஈரான் அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் சில தளர்த்தப்படும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது தெரிகிறது.
இந்த அறிவிப்பு உலக அரசியலில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் மீதான அணு ஆயுதத் தடை மற்றும் பொருளாதார நிவாரணம் ஆகியவை உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வரும் என்பதை அடுத்த சில நாட்களில் தான் தெரியவரும்.
அமெரிக்கா ஈரானுடன் உறவை மேம்படுத்தினால், உலக அளவில் எண்ணெய் விலை மற்றும் பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்துக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/trump-announces-close-cooperation-with-iran-tariff-sanctions-relief-talks-underway-788237.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
