ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! | Iran War: 2 LPG carriers crossing Strait of Hormuz

International

oi-Nantha Kumar R

டெல்லி: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. நம் நாட்டின் கப்பல்களுக்கு நட்பு அடிப்படையில் ஈரான் அனுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் போருக்கு நடுவே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இன்று 2 எல்பிஜி கப்பல்கள் நம் நாட்டை நோக்கி வருகை புரிந்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் நம் நாட்டில் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

iran-war-2-lpg-carriers-crossing-strait-of-hormuz

தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. நம் நாட்டுக்கும், ஈரானுக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. அதோடு நம் நாட்டின் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிப்பு குறித்து மத்திய அரசு ஈரானிடம் எடுத்து கூறியது. அதனை புரிந்து கொண்டு ஈரான் நம் நாட்டுக்கு வரும் கப்பல்களை அனுமதித்து வருகிறது.

ஜலசந்தியை கடக்கும் 2 கப்பல்கள்

அந்த வகையில் தான் இந்தியா வரும் BW Tyr, BW Elm எனும் கேஸ் சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று கடக்க தொடங்கி உள்ளன. துபாய் மற்றும் ராஸ் அல்கைமாவுக்கு வடக்கே மொத்தம் 5 கப்பல்கள் நங்கூரமிட்டு இருந்தன. இதில் இந்த 2 கப்பல்களும் அடங்கும். இந்நிலையில் தான் தற்போது அந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க தொடங்கி இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளதுது.

எவ்வளவு கேஸ் வருது?

இந்த கப்பல்கள் பிஎம் குழுமத்துக்கு சொந்தமானதாகும். இதில் BW Elm கப்பலை HPCL நிறுவனமும், BW Tyr கப்பலை BPCL நிறுவனமும் வாடகைக்கு எடுத்துள்ளன.

இந்த 2 கப்பல்களும் ஏறத்தாழ 93,000 டன் எல்பிஜியை சுமந்து செல்லும் தன்மை கொண்டதாகும். இது நம் நாட்டின் 3 நாள் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

ஏன் முக்கியம்?

இதில் BW Elm கப்பல் மங்களூர் துறைமுகம் நோக்கியும், BW Tyr கப்பல் மும்பை நோக்கியும் செல்கிறது. இதற்கு முன்பு அரசுக்கு சொந்தமான SCI நிறுவனத்தின் இரண்டு எல்பிஜி கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து கேஸை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளளது.தற்போதைய சூழலில் நம் நாட்டில் கச்சா எண்ணெய், கேஸ் கப்பல்களின் வருகை என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் நம் நாடு கச்சா எண்ணெய் தேவையில் 80 முதல் 85 சதவீதமும், கேஸ் தேவையில் 60 சதவீதத்தையும் இறக்குமதி தான் செய்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-war-2-lpg-carriers-crossing-strait-of-hormuz-785201.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo