ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் | Philippines Energy Crisis: President Marcos Jr Declares National Emergency Amid Fuel Protests and Global War Risks

International

oi-Halley Karthik

மணிலா: ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள்தான் உடனடியாக பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்போது பிலிப்பைன்ஸ், எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது.

நம்மை போலவே பிலிப்பைன்ஸும் எரிபொருளுக்கு இறக்குமதியைதான் அதிக அளவு நம்பியிருக்கிறது. போர், இறக்குமதியை பாதித்திருப்பதால் தற்போது எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது.

Philippines Energy Crisis

பிலிப்பைன்ஸில் என்ன நடக்கிறது?

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரிய அளவுக்கு எண்ணெய் வளம் கிடையாது. எனவே 90%க்கு அதிகமான எண்ணெய் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளைதான் அது சார்ந்திருக்கிறது. குறிப்பாக சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய்யை வாங்கி, தங்கள் நாட்டில் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறது. இதில் என்ன பிரச்சனை எனில், பிலிப்பைன்ஸில் ஒரே ஒரு சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே இருக்கிறது.

எரிபொருள் விலை

எனவே பெரும்பாலும், கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு பதில், நேரடியாக பெட்ரோல், டீசலையே வாங்கி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் எகிறினாலும் கூட, பிலிப்பைன்ஸில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட்டுவிடும்.

தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, பேரலுக்கு 120 டாலரை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக,

  • ஒரு லிட்டர் பெட்ரோல் – ரூ.157-176
  • ஒரு லிட்டர் டீசல் – ரூ. 204-210
  • ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் – ரூ.212

அரசு எடுத்த நடவடிக்கை

என விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர் காரணமாக எரிபொருள் விலை ரூ.37 அதிகரித்திருக்கிறது. எனவே நிலைமையை கண்ட்ரோல் செய்ய அந்நாட்டு அரசு எமெர்ஜென்சியை அறிவித்திருக்கிறது. இனி அரசுதான் எரிபொருளை இறக்குமதி செய்யும். விலை உயர்வை கட்டுப்படுத்த, எரிபொருளை கள்ள சந்தையில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மானியம் அறிவிப்பு

அதேபோல, பொது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7,700 வரை மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில நகரங்களில் மாணவர்களுக்கும், தொழிலளார்களுக்கும் இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மறுபுறம் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் பெர்மிஷன் கேட்டு வருகிறது.

இதெல்லாம் வேலைக்கு ஆகாது

ஆனால், இந்த நடவடிக்கையெல்லாம் வெறும் கண் துடைப்புதான், பிரச்சனையை சரி செய்ய உடனடியாக கலால் வரி மற்றும் வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, வரும் வியாழக்கிழமை முதல் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

இந்தியாவுக்கு நெருக்கடி

பிலிப்பைன்ஸை போல, இந்தியாவிலும் எமெர்ஜென்சியை அறிவிக்க ரொம்ப நாள் ஆகாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்தியாவும் எரிபொருளுக்கு இறக்குமதியைதான் சார்ந்திருக்கிறது. ஈரான் போர், எரிபொருள் விநியோக சங்கிலியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடுமையாக பாதிக்கும். இந்தியாவிடம் சேமிப்பு நிறைய இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால், இவை எல்லாம் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு மட்டுமே போதுமானவை.

எனவே, விரைவில் இந்தியா எரிபொருள் எமெர்ஜென்சியை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/philippines-energy-crisis-president-marcos-jr-declares-national-emergency-amid-fuel-protests-and-gl-784201.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo