என்ன ஆட்டம் ஆடுனீங்க.. காதலியுடன் படுத்துக்கொண்டே ரொமான்ஸ்.. ஹர்திக் பாண்டியா மீது போலீசில் புகார்! | T20 World Cup 2026: Case registered against Hardik Pandya for insulting the national flag during the T20 World Cup victory celebration with his lover Mahieka sharma

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடி அணிந்தபடி, காதலி மஹிகா சர்மாவுடன் கீழே படுத்திருந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலமாக டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.

T20 World Cup 2026

இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கொஞ்சம் கூடுதலாக கொண்டாடினார். ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து கூறுவதற்காக அவரின் காதலி மஹிகா சர்மா மைதானத்திற்குள் வந்தார். அப்போது மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா கூடுதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

முதலில் டான்ஸ் ஆடியும், ரசிகர்களுக்கு நன்றி கூறியும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன்பின் மஹிகா சர்மாவுக்கு உதட்டு முத்தம் கொடுத்து கொண்டாட, இவர்களின் நெருக்கம் எல்லை மீறியது. ஒரு கட்டத்தில் கழுத்தில் தேசியக் கொடியை கட்டிக் கொண்டு மஹிகா சர்மாவுடன் கொண்டாட்ட அரங்கிலேயே படுத்திக் கொண்டே ரொமான்ஸ் செய்ய தொடங்கிவிட்டார்.

இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஹர்திக் பாண்டியா எல்லை மீறிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் ஹர்திக் பாண்டியா மீது சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் தேசியக் கொடியை அணிந்த படி, காதலி மஹிகா சர்மாவுடன் கீழே படுத்திருக்கிறார். அதேபோல் தேசியக் கொடியுடன் ஹர்திக் பாண்டியா டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த வீடியோக்களை சோசியல் மீடியாவிலும் பார்க்க முடியும். காதலியுடன் படுத்திருந்த போது, தேசியக் கொடியை அணிந்திருந்ததை அவமானகரமாகவே பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-case-registered-against-hardik-pandya-for-insulting-the-national-flag-during-the-780695.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo