
Cricket
oi-Mani Singh S
சென்னை: நடப்பு ஐபிஎல் தொடங்கி நடந்து வரும் நிலையில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோல்வியை சந்தித்து வருகிறது. நேற்றைய பெங்களூர் ஆட்டத்திலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளை கலாய்க்கும் விதமாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள். – ஆங்கில தலைப்பு, ஆங்கில சம்மரி, ஆங்கிலம் தமிழில் கீவெட்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11- வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. அடுத்தடுத்து இரண்டு தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை அணி இந்த மேட்சில் பெங்களூரை புரட்டி போட்டு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையை பந்தாடிய பெங்களூர்
அதற்கு ஏற்றது போல சென்னை அணி டாசிலும் வெற்றி பெற்றது. முதலில் பவுலிங் செய்தது. ஆனால், பெங்களூர் அணிதான் சிஎஸ்கேவை பந்தாடிவிட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 250 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ரன்கள் அடித்து சென்னை பந்து வீச்சை சிதறடித்தார்.
இதையடுத்து, இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 43 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றது. தொடர்ந்து 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளை கலாய்க்கும் விதமாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
போக்கிரி படத்தின் விஜய்யின் காமெடியை வைத்து மீம்ஸ் ஒன்று டிரெண்ட் ஆகி வருகிறது. எல்லோரும் என்னையை அடிச்சி டிரெயினிங் எடுத்துக்கோங்க என வாண்டடாக வந்து சிக்குவது போல சிஎஸ்கேவை கலாய்த்து உள்ளனர்.
அதேபோல மற்றொரு மீம்ஸ் ருதுராஜ் கேப்டன்சியை கலாய்த்து உள்ளனர். தொடர் தோல்விகளையே அவரது கேப்டன்சியில் சென்னை அணி சந்திப்பதால் அவர் நமக்கு வேணாம்னே என்று சந்திரமுகி படத்தில் வரும் காமெடி காட்சியை வைத்து மீம்ஸாக போட்டு உள்ளனர்.
எப்போதும் ஆர்சிபி அணியை சென்னைதான் போட்டு பிளக்கும். ஆனால், கடைசி 4 போட்டிகளாக ஆர்சிபிதான் சென்னையை போட்டு பிளக்கிறது என்று சொல்வது போல கடந்த 4 போட்டிகளில் தொடர் தோல்வியை ஆர்.சி.பிக்கு எதிராக தோல்வி அடைந்ததை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
உலக கோப்பை போட்டியில் அசத்தலாக விளையாடிய சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணியில் இணைந்த பிறகு கடந்த மூன்று போட்டிகளாக ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆகி வருவது பற்றி விமர்சித்தும் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒருமுறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். இரண்டு இன்னிங்ஸ்களில் மட்டுமே கவுரவமான ஸ்கோரை எட்டியுள்ளார். இதை வைத்து கலாய்த்துள்ள நெட்டிசன்கள், பிரபு காமெடியை பதிவிட்டு இவன் உண்மையாகே டம்மிதான் போல என்று காட்சியை சித்தரித்து கலாய்த்து உள்ளனர்.
இணையம் முழுக்க சென்னையை பங்கமாய் கலாக்கும் மீம்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது. சென்னை அணி வரும் போட்டியிலாவது அதிரடியை காட்டி கம்பேக் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-trolled-brutally-as-losing-streak-continues-in-ipl-memes-take-over-internet-787451.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
