எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது | Pakistan Defence Minister on India: Threatens in Future Conflict, unwanted statement by Khawaja Asif

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: இந்தியா குறித்து தேவையில்லாத கருத்துகளைச் சொல்லி சர்ச்சையில் சிக்குவதையே பாகிஸ்தான் அமைச்சர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கிடையே இந்தியா எதாவது தங்கள் மீது தாக்குதலை நடத்தினால் கொல்கத்தா நகரம் மீது தாக்குவோம் எனச் சொல்லி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆசிஃப் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல்களை நடத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், தேவையில்லாமல் அத்துமீறவே முயன்று வருகிறது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து, பாடம் புகட்டி வருகிறது. ஆனால், எவ்வளவு அடி வாங்கினாலும் பாகிஸ்தான் திருந்துவது போலத் தெரியவில்லை.

Pakistan Defence Minister on India

தேவையில்லாத பேச்சு

அதேபோல பாகிஸ்தான் தலைவர்களும் தேவையில்லாமல் இந்தியா குறித்து வாயை விட்டு வருகிறார்கள். இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மீண்டும் தேவையே இல்லாமல் இந்தியாவை வம்பு இழுத்து இருக்கிறார். எந்த செயலுக்கும் வலுவான பதிலடி கிடைக்கும் என்றும், சீண்டினால் கொல்கத்தாவைக் குறிவைப்போம் என்றும் அவர் கூறினார். சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிஃப், இந்தியா போலியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனக் குற்றம் சாட்டினார்.

கொல்கத்தா

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட்டில், செய்தியாளர்களிடம் பேசிய ஆசிஃப், “இந்த முறை இந்தியா போலியான நடவடிக்கையை எடுக்க முயலும். அதுபோல எதாவது செய்தால் நிச்சயமாக நாங்கள் அதைக் கொல்கத்தா வரை கொண்டு செல்வோம்” என்று அவர் தெரிவித்தார்.

உள்ளூர் ஏஜெண்டுகள் அல்லது இந்திய காவலில் உள்ள பாகிஸ்தானியர்களையோ பயன்படுத்தி அதுபோன்ற நடவடிக்கையைப் பாகிஸ்தான் எடுக்கும் என ஆசிஃப் குறிப்பிட்டாலும் அவர் அதற்கு எந்தவொரு ஆதாரமும் வழங்கவில்லை. வழக்கம் போல வாய்க்கு வந்ததையே அடித்துவிட்டார். எந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் பதிலடி வேகமாகவும் துல்லியமாகவும் தீர்க்கமாகவும் இருக்கும் என அவர் அறிவித்திருந்தார்.

இந்தியா

பாகிஸ்தான் எதாவது தேவையில்லாமல் அத்துமீறினால் முன்னெப்போதும் இல்லாத, தீர்க்கமான பதில் கிடைக்கும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்து இருந்த நிலையில், ஆசிப் இதுபோல உளறி இருக்கிறார்.

இதில் விஷயம் என்னவென்றால் கடந்தாண்டு ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி கொடுத்திருந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் திணறிப் போனது. அதன் ராணுவ தலைமையகத்தைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அந்தளவுக்குப் பாகிஸ்தானை இந்தியா திணறடித்தது.

சரணடைந்த பாகிஸ்தான்

இதனால் வேறு வழியில்லாமல் ஓடி வந்து சரணடைந்து போரைப் பாகிஸ்தான் முடித்துக் கொண்டது. அப்படியிருக்கும்போது, தேவையில்லாமல் இந்தியா குறித்து இப்படி எல்லாம் பேசி வருகிறது. ஆனால், என்ன தான் இப்படியெல்லாம் வாய் பேசினாலும் மோதலில் இந்தியாவின் தாக்குதலை ஒரு நாள் கூட பாகிஸ்தானால் சமாளிக்க முடியாது என்பதே உண்மையாக உள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-defence-minister-on-india-threatens-in-future-conflict-unwanted-statement-by-khawaja-asif-787227.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo