ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் | T20 World Cup 2026 Prize Money Boost: India Wins $3 Million, Gets Extra ₹17 Lakh in Just One Day

Cricket

oi-Vigneshkumar

சென்னை: நேற்றைய தினம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் வென்ற இந்திய அணிக்கு நேற்று பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் அதன் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கான காரணத்தையும் பின்னணி பற்றியும் நாம் பார்க்கலாம்!

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 20 அணிகள் நடந்தது. லீக், சூப்பர் 8, அரையிறுதி போட்டிகளில் கெத்து காட்டிய இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் களமிறங்கின. இந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

T20 World Cup 2026 Prize Money Boost India Wins 3 Million Gets Extra 17 Lakh in Just One Day

பரிசு தொகை

இதில் கோப்பையை வென்ற இந்திய டீமுக்கு 3 மில்லியன் டாலர் (சுமார் ₹27.52 கோடி) பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.6 மில்லியன் டாலர் (சுமார் ₹14.65 கோடி) கிடைத்தது.. ஒட்டுமொத்தமாக டி20 உலகக் கோப்பைக்குப் பரிசுத் தொகையை 13.5 மில்லியன் டாலராக (120 கோடி ரூபாய்க்கும் மேல்) அறிவிக்கப்பட்டு இருந்தது. இது முந்தைய 2024 உலக கோப்பை சமயத்தில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட 20% அதிகமாகும்.. டி20 போட்டிகள் எந்தளவுக்கு பேமஸ் ஆகி வருகிறது என்பதற்கும் இது ஒரு உதாரணம்!

யாருக்கு எவ்வளவு

அதேபோல அரையிறுதிக்கு எட்டிய அணிகளுக்கும் பரிசு தான். அரையிறுதியில் தோல்வியடையும் ஒவ்வொரு அணிக்கும் 790,000 டாலர் (சுமார் ₹7.24 கோடி) வழங்கப்படும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் ஒவ்வொன்றும் 380,000 டாலர் (சுமார் ₹3.48 கோடி) பெறும். உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்த பரிசு வழங்கப்படுகிறது

20 நாடுகள் பங்கேற்ற இந்த டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு வந்த அணிகள் மட்டுமின்றி, கலந்து கொண்ட அணிகளுக்கும் பரிசு இருக்கிறது. முதல் சுற்று, அதாவது க்ரூப் சுற்றோடு வெளியேறிய ஒவ்வொரு அணிக்கும் 250,000 டாலர் (சுமார் ₹2.29 கோடி) வழங்கப்படும். இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு இது ஒரு வீரர் வாங்கும் சம்பளத்தை விட குறைவானது. ஆனால், இதன் மூலம் சிறு சிறு அணிகளுக்கும் தங்களை டெவலப் செய்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

உயர்ந்தது

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 3 மில்லியன் டாலர் வழங்கப்படும் என முன்பே குறிப்பிட்டு இருந்தோம். ஐபிஎல் தொடர்களில் எப்போதும் பரிசுத் தொகை ரூபாயிலேயே இருக்கும். ஆனால், சர்வதேச தொடர் என்பதால் இதில் டாலரில் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதுவே நமது பரிசுத் தொகை எகிறக் காரணமாக இருந்துள்ளது.

டிரம்பின் அமெரிக்கா

அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சில காலமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றைய தினம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் இதன் வெல்யூ ரூ.27.52 கோடியாக இருந்தது. அதேநேரம் இன்று ரூபாய் மதிப்பு மேலும் சரிந்த நிலையில், அது ரூ.27.70 கோடியாக உயர்ந்துவிட்டது. அதாவது டாலர் மதிப்பில் அது மாறவில்லை என்றாலும் ரூபாய் மதிப்பில் உயர்ந்துவிட்டது. டிரம்பின் அமெரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளே டாலர் மதிப்பு உயரக் காரணமாக இருக்கும் சூழலில், இது இந்திய டீமுக்கான ஜாக்பாட் போலவே இருக்கிறது. இதன் மூலம் ஒரே நாளில் சுமார் ரூ.17 லட்சம் பரிசு தொகை உயர்ந்துள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-prize-money-boost-india-wins-3-million-gets-extra-17-lakh-in-just-one-day-779859.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo