
International
oi-Halley Karthik
தெஹ்ரான்: கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான, ஹர்முஸ் நீரிணை கடல் பகுதியில் ஈரான் கண்ணி வெடியை வைத்திருக்கிறது. இதனால் அமெரிக்கா பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று அந்நாட்டு செய்தி ஊடகமான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ எச்சரித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கு வளைகுடா நாடுகளைதான் நம்பியிருக்கின்றன. இந்த நாடுகளிலிருந்து வரும் எரிபொருட்கள் ஹர்முஸ் நீரிணையை தாண்டிதான் வர வேண்டும். இந்த இடத்தில்தான் ஈரான் கண்ணி வெடிகளை வைத்திருக்கிறது.

கண்ணி வெடி வைத்த ஈரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றன. இப்படி இருக்கையில், இதற்கு எதிராக ஈரான் தீவிரமான பதில் அட்டாக்கை கையில் எடுத்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் போக கூடாது என்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது. நேரடியாக மோதினால் அமெரிக்காவை ஜெயிக்க முடியாத என்பது ஈரானுக்கு தெரியும். எனவேதான் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது.
ஒரு சொட்டு கூட எடுக்க முடியாது
எனவே ஹர்முஸ் நீரிணையை தனது கண்ட்ரோலில் எடுத்திருக்கிறது. இது குறித்து ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ஈரான் இதுவரை இல்லாத அளவில் கண்ணிவெடிகளை ஈரான் ஹர்முஸ் நீரிணையில் வைத்திருக்கிறது. இது தவிர ஈரானிடம் 2000-6000 வரை நவீன ரக கண்ணி வெடிகள் இருக்கலாம். எனவே ஹர்முஸ் நீரிணை என்பது மரண பள்ளத்தாக்காக மாறியிருக்கிறது. ஒரு சொட்டு கச்சா எண்ணெய்யை கூட இந்த வழியாக வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் வார்னிங் கொடுத்திருக்கிறது” என்று கூறியுள்ளது.
டிரம்புக்கு நெருக்கடி
அமெரிக்கா இந்த விஷயத்தில் ரொம்பவே டென்ஷன் ஆகியிருக்கிறது. காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். ஏற்கெனவே அமெரிக்காவில் பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை எக்குதப்பாக ஏறியிருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலையை அப்படியே பாதியாக குறைப்பேன் என்று டிரம்ப் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், இப்போது நடத்திருப்பதே வேறு. எனவே மக்களின் எதிர்ப்பை டிரம்ப் சம்பாதிப்பதற்குள் பிரச்சனையை ஸ்மூத்தாக முடிக்க வேண்டும்.
எரிபொருள் தட்டுப்பாடு
எனவே டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். “ஹர்முஸ் ஜலசந்தியில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை உடனே அகற்ற வேண்டும். இல்லை எனில், ஈரான் இதுவரை பார்க்காத ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ளும்” என்று வார்னிங் கொடுத்திருக்கிறார். இதற்கெல்லம் ஈரான் அசைந்து கொடுக்கும் என்று தெரியவில்லை. போகிற போக்கை பார்த்தால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஆட்டி படைக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/strait-of-hormuz-crisis-iran-plants-mines-to-choke-global-economy-reports-wsj-780439.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
