கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! | CSK: CSK will be playing 3 out of their last 4 games at Chepauk Stadium in IPL 2026 Which will be big treat for MS Dhoni fans

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகி இருந்த சூழலில், தற்போது முழு அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் சிஎஸ்கே அணி 2 முறை மும்பை அணியுடனும், ஒருமுறை மட்டும் ஆர்சிபி அணியுடன் விளையாடுவது தெரிய வந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியின் மொத்த அட்டவணையையும் பார்க்கலாம்.

ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த சூழலில், தற்போது ஒட்டுமொத்த சீசனுக்கான அட்டவணையையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் சிஎஸ்கே அணி மார்ச் 30ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

CSK

இதன்பின் ஏப்ரல் 3ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஆட உள்ளது. பின்னர் ஏப்ரல் 11ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 18ஆம் தேதி ஐதராபாத் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட உள்ளது. அதேபோல் ஏப்ரல் 23ஆம் தேதி வான்கடே மைதானத்தில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது.

பின் ஏப்ரல் 26ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி ஆடுகிறது. அதேபோல் மே 2ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாடுகிறது. பின்னர் மே 5ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடுகிறது.

தொடர்ந்து மே 10ஆம் தேதி சேப்பாக்கம் மண்ணில் நடக்கும் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி ஆடுகிறது. பின் மே 15ஆம் தேதி லக்னோ மைதானத்தில் லக்னோ அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி ஆடுகிறது. இதையடுத்து மே 18ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட உள்ளது.

பின் மே 21ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. மார்ச் 28ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன்பின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-csk-will-be-playing-3-out-of-their-last-4-games-at-chepauk-stadium-in-ipl-2026-which-will-be-bi-784667.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo