கண்கள் சிவந்த டிரம்ப்.. இஸ்ரேலுக்கு எதிராகவே திரும்பிய அமெரிக்கா.. ஒரே நைட்டில் எல்லாமே மாறுதே | Donald Trump Is Not Happy: US On Israel Strikes On Iran Oil Depots It Might Create Huge Trouble

International

-Vigneshkumar

வாஷிங்டன்: நேற்றைய தினம் ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது பெரும் பேசுபொருளான சூழலில், அமெரிக்கா இதனால் கடும் கோபத்தில் இருக்கிறதாம். இது தொடர்பாக இஸ்ரேலிடம் சில காட்டமான கேள்விகளை எழுப்பியும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தொடர்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் ஒருங்கிணைந்தே தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இப்போது இரு தரப்பிற்கும் இடையே மிகப் பெரிய ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஈரான் எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், பெரும் தீ விபத்துகளும் நிகழ்ந்ததாகத் தகவல் வெளியானது.

Donald Trump Is Not Happy US On Israel Strikes On Iran Oil Depots It Might Create Huge Trouble

அமெரிக்கா கோபம்

இஸ்ரேல் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவிடம் முன்கூட்டியே தெரிவித்தபோதிலும், தெளிவாகக் கூறவில்லையாம். ஈரான் தனது ஜெட்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என மட்டும் அமெரிக்காவிடம் இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், உண்மையில் இஸ்ரேலின் தாக்குதல் அதை விட தீவிரமானதாக இருந்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அல்லது இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் இந்த தாக்குதல் சரியானது இல்லை என்றும் டிரம்ப் இதனால் கோபமடைந்துள்ளதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவிடம் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளதை இஸ்ரேல் அதிகாரியும் சர்வதேச ஊடகத்தில் உறுதி செய்துள்ளார்.

பேரழிவு

இஸ்ரேல் ராணுவம் தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றி உள்ள மூன்று எண்ணெய் கிடங்குகள், சுத்திகரிப்பு ஆலையைத் தாக்கியதில் பேரழிவைப் போன்ற சூழல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத தீ பரவி, அடர்ந்த நச்சுப் புகையின் மேகங்களால் நகரம் முழுக்க பரவி இருந்தது. ஒரு எண்ணெய் கிடங்கிலிருந்து கசிந்த எரிபொருள் தீப்பிடித்து, தெருக்களில் “நெருப்பு நதி” பாய்ந்தது. தாக்குதலுக்குப் பின், எண்ணெய், புகை கலந்த கருப்பு மழைநீர் பெய்யவே, ஆசிட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

பொருளாதார பாதிப்பு

இதனால் ஏற்படும் மனிதநேய, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், ராணுவ ரீதியாகவே இதை ஒரு தீவிரமான தாக்குதல் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது மோசமான சர்வதேச பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என்கிறார்கள். அவர்களின் அச்சப்படியே இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு மறுநாள் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. போர், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் என ஏற்கனவே அழுத்தத்திலிருந்த கச்சா எண்ணெய் விலை இதனால் கூடுதலாக எகிறியது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலரை தண்டியது. திங்கட்கிழமை அன்று, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $107.97 ஆக இருந்தது . இது வெள்ளிக்கிழமை ரேட்டான $92.69-இலிருந்து 16.5% அதிகமாகும்.

ஆதரவு போய்விடும்

இதுபோன்ற பாதிப்புகளைத் தாண்டி, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை வியூக ரீதியாகவே முற்றிலும் தவறானது என என அமெரிக்கா கருதுகிறது. எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் என்பது ரொம்பவே தப்பு.. இப்போது ஈரானில் உள்ள கணிசமான மக்கள் டிரம்ப்பையும் அவரது ராணுவ நடவடிக்கையையும் ஆதரித்து வருகிறார்கள். ஆனால், இது போன்ற தாக்குதல்கள் அவர்களையும் எதிராகத் திரும்பச் செய்யும் என்பதே அதன் கவலை.

இது தொடர்பாக டிரம்ப்பின் ஆலோசகர் ஒருவர் ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அதிபர் இந்தத் தாக்குதலை விரும்பவில்லை. அவர் எண்ணெய்யைக் காப்பாற்றவே விரும்புகிறார், எரிக்க அல்ல. கச்சா எண்ணெய் விலை உயர்வது மக்களுக்கு நிம்மதியைத் தராது. அது தேவையில்லாத குழப்பத்தையே ஆட்சியிலும் ஏற்படுத்தும்” என்றார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/donald-trump-is-not-happy-us-on-israel-strikes-on-iran-oil-depots-it-might-create-huge-trouble-011-779889.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo