
Business
oi-Prasanna Venkatesh
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச ஆய்வு நிறுவனம் ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வின்படி, கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 140 டாலர் என்ற அளவில் இரண்டு மாதங்கள் சராசரியாக கச்சா எண்ணெய் விலை நிலைத்திருந்தால், உலகளாவிய மந்தநிலை (Global Recession) ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டியிருக்கும் வேளையில் கடந்த 5 வாரங்களாக சராசரியாக 100 டாலர் அளவில் நிலைத்திருக்கிறது. குறிப்பிடத்தக்கது.

இதே நேரத்தில் கேபிட்டல் எக்னாமிக்ஸ் நிறுவனம், இந்த போர் மேலும் மூன்று மாதங்கள் நீடித்தால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை அடுத்த ஆறு மாதங்களில் சராசரியாக 150 டாலர் வரை உயரக்கூடும் என கணித்துள்ளது. இந்த கணிப்புகள் உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதை உணர்த்துகிறது.
60% உயர்ந்த கச்சா எண்ணெய்
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 60%க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு, உலக சந்தைகளில் பணவீக்கம் (Inflation) மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், International Energy Agency (IEA) தனது 52 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய அளவில் தனது அவசர கையிருப்பை மக்களின் பயன்பாட்டுக்காக வெளியீட்டது. சுமார் 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சந்தைக்கு கொண்டுவந்தது IEA. ஆனால் இந்த நடவடிக்கையும் கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என்பது கவலைக்கிடமான விஷயமாகும்.
ஹார்மூஸ்
உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாக Strait of Hormuz உள்ளது. ஆசியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிகளில் சுமார் 80% இந்த வழித்தடம் மூலம் நடைபெறுகிறது, உளகளாவிய போக்குவரத்தில் சுமார் 20-25 சதவீத பங்கு வகிக்கிறது. இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பு காரணமாக, சில நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
உதாரணமாக, வியட்நாம் நாட்டில் 20 நாட்களுக்கு கூட போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த 2-3 வாரத்தில் உலகளவில் மோசமான எரிபொருள் நெருக்கடியை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
ஐரோப்பா – அதிக அபாயம்
இந்த கச்சா எண்ணெய் நெருக்கடி மூலம் ஐரோப்பிய பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும். குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ரெசிஷன் பாதிப்பை அதிகமாக நுகரக்கூடிய நாடாக உள்ளது. ஏற்கனவே ரஷ்யா-விடம் இருந்து பெற்று வந்த கச்சா எண்ணெய், எரிவாயு தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், மத்திய கிழக்கில் இருந்து தான் அனைத்த தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஐரோப்பாவிற்கு உதவும் கரங்களை குறைந்துக்கொண்டே வருகிறது.
இதன் காரணமாக European Central Bank (ECB) வட்டி விகிதக் குறைப்பை தற்காலிகமாக ஒத்திவைத்து, பணவீக்கம் கணிப்பை உயர்த்தியுள்ளது. இது பொருளாதாரத்தில் அழுத்தம் அதிகரித்து வருவதை உறுதிப்படுத்துகிறது.
மொத்தத்தில், கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்வது, விநியோக சங்கிலி சிக்கல்கள் மற்றும் போர் நீடிப்பு ஆகியவை ஒன்றாக சேர்ந்து உலகளாவிய பொருளாதாரத்தை ஒரு முக்கியமான திருப்புமுனைக்கு கொண்டு சென்றுள்ளன. $140-$150 அளவுக்கு கச்சா எண்ணெய் விலை நீடித்தால், ரெசிஷன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் அபாயம் அதிகரித்து வருகிறது.
இதனால் கூடிய விரைவில் போரை கட்டுப்படுத்த அமெரிக்காவும், ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 நாளில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரில் இருந்து 110 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/crude-oil-at-140-150-threshold-global-recession-fears-intensify-as-iran-war-disrupts-supplies-787107.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
