கல்யாண வீடு வரைக்கும் வந்த பிரச்சனை.. எரிபொருள் தட்டுப்பாட்டால் கெடுபிடி காட்டும் வங்கதேச அரசு! போச்சு | Bangladesh Cuts Office Hours, Bans Wedding Lights to Tackle Energy Crisis

International

oi-Mani Singh S

டாக்கா: மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க வங்கதேசம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக திருமண வீட்டில் அலங்கார விளக்குகள் பயன்படுத்த கூடாது என்று வங்கதேச அரசு கூறியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா போரால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் பல்வேறு நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இலங்கை, பிலிப்பைன்ஸ், மலேசியாவிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Bangladesh Cuts Office Hours Bans Wedding Lights to Tackle Energy Crisis

தேசிய அவசர நிலை

மலேசியாவில் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் வாங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரான் – அமெரிக்கா மோதல் முடிவின்றி இழுத்துக்கொண்டே செல்வதால் பல்வேறு நாடுகளிலும் நெருக்கடிகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன.

அந்த வகையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கும் விதமாக சிக்கன நடவடிக்கையை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வங்கதேசத்தில் அலுவலக நேரம் குறைக்கப்பட்டுள்ளது. திருமண வீடுகளில் அலங்கார விளக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வங்க தேசம் தனது எரிபொருள் தேவைக்கு 95 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளது. இதில் பெரும்பாலும் மேற்கு ஆசியாவில் இருந்தே வாங்கப்படுகிறது. மின்சார உற்பத்தியும் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட கேஸ் பயன்படுத்தியே நடைபெறுகிறது. டீசல் பெரும்பாலும் விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

இதனால் கடும் நெருக்கடியை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கதேச அரசு இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் மறு உத்தரவு வரும் வரை ஒரு மணி நேரம் பணி நேரத்தை குறைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு அலுவலகங்கள் 9 மணி முதல் 4 மணி வரையும் வங்கிகள் 9 மணி முதல் 3 மணி வரையுமே இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு மேல்

வணிக வளாகங்கள் மாலை 6 மணிக்கு மேல் திறந்து இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகளும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் 30 சதவீதம் எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறினர்.
அரசு துறைகளில் புதிய வாகனங்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி வாகனங்கள் டீசலில் இருந்து மின்சார முறைக்கு மாறி வருகிறன்றன. எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க 2 பில்லியன் டாலர் கடனாக பெற முயன்று வருவதாக கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் வாகன ஒட்டிகள் முண்டியடிப்பதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பதுக்கல்கள் எதுவும் நடைபெறுகிறதா? என்று நாடு முழுக்க தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். சமீபத்தில் நடைபெற்ற ரெய்டுகளில் 5 ஆயிரம் ரெய்டுகள் நடைபெற்றதாகவும் இதில் 4 லட்சம் லிட்டர் எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வங்கதேச அதிகாரிகள் கூறினர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/bangladesh-cuts-office-hours-bans-wedding-lights-to-tackle-energy-crisis-787013.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo