காசு பணம் துட்டு மணி மணி..” இதை மட்டும் பண்ணுங்க.. ரொம்பவே ஈஸியாக லட்சங்களில் பணத்தை சேமிக்கலாம்! | What is 30-Day Rule: Easy Hack to Stop Impulse Spending & Save Money that will be a game changer

Business

oi-Vigneshkumar

சென்னை: எவ்வளவு சம்பளம் வந்தாலும் கூட பணத்தைச் சேமிக்கவே முடியவில்லை என்று பலரும் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். ஊதிய உயர்வு, போனஸ் என எது வந்தாலும் இந்த டைலாக் மட்டும் மாறாது. இப்படிப் பணத்தைச் சேமிக்க முடியாமல் சிரமப்படும் நபராக நீங்கள் இருந்தால்.. அதை எப்படி மாற்றி பணத்தைச் சேமிக்கலாம் என்பது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம்!

இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் நல்ல கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் சென்று அவ்வளவு பணம் சேமித்துள்ளீர்கள் எனக் கேட்டால்.. அட நீங்க வேற பாஸ்.. மாசக் கடைசியிலேயே பணம் இருக்காது என்ற பதிலே வரும். நிச்சயம் உங்களுக்குத் தெரிந்த சிலர் அல்லது நீங்களே கூட இந்தச் சிரமத்தை எதிர்கொண்டு இருக்கலாம்.

saving personal finance

ஓவர் செலவுகள்

இதுபோல ஓவர் செலவு செய்ய ஆன்லைனில் அல்லது கடைகளில் நாம் பார்க்கும் பொருட்களை எல்லாம் உடனடியாக வாங்குவதே பிரதானக் காரணம். கம்மி ரேட் கொண்ட பொருளாக இருந்தாலும் கூட அதுபோல ஒரு 10- 20 பொருளை வாங்கினாலே அது பெரிய தொகையைக் காலி செய்துவிடும். ஒரு ஆர்வத்தில் வாங்கிவிட்டு, பிறகு யூஸ் செய்யாமல் போட்டுவிடுவோம். இது நமக்கு நிதி ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தச் சிக்கலைச் சரி செய்யவே 30 நாள் விதி உள்ளே வருகிறது.

30-நாள் விதி

30-நாள் விதி என்பது பணத்தைச் சேமிக்க உதவும். நாம் பணத்தைச் செலவழிப்பதற்கு முன் தீவிரமாக யோசிக்க உதவும் ஒரு எளிய பழக்கமாகும். இது மண்டையைப் பிளந்து யோசித்து அமல்படுத்தச் சிக்கலான விதிமுறைகள் எல்லாம் இல்லை. மிகவும் எளிமையானது. இதன் காரணமாகவே பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் இந்த விதியைப் பரிந்துரைக்கிறார்கள்.

இதன் ரூல்ஸ் ரொம்பவே எளிமையானது.. அடிப்படைத் தேவைகளைத் தாண்டி அத்தியாவசியமற்ற ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற யோசனை வந்தவுடன், அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பொருளின் பெயர், விலையை நோட் செய்து வைக்கவும். மேலும், அந்த பொருளைக் கண்ட தேதியையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன செய்ய வேண்டும்

பிறகு 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒரு மாதத்திற்குப் பிறகும், அந்தப் பொருள் உங்களுக்குத் தேவை என்றும் பட்ஜெட்டிற்குள் பொருந்துகிறது என்றும் நீங்கள் கருதினால் அப்போது அந்தப் பொருளை நீங்கள் வாங்கலாம். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் 30 நாட்களில் ஆசை மறைந்துவிடும், பணமும் மிச்சமாகும். அரிதாகச் சில பொருட்களை மட்டுமே 20 நாட்களுக்குப் பிறகும் நாம் வாங்குவோம். இதனால் பணத்தைச் சேமிக்க இது உதவும்.

ஒரு பொருளை வாங்கலாம் என நாம் யோசிப்பதற்கும், அதைப் பணம் செலவழித்து வாங்குவதற்கும் இடையே அதிகக் கால அவகாசத்தை உருவாக்குவதே இந்த விதியின் நோக்கமாகும். இதன் காரணமாக அவசரப்பட்டு தேவையில்லாத பொருட்களை நாம் வாங்குவது கணிசமாகக் குறைகிறது.

ரொம்ப ஈஸி

திட்டமிடாமல் ஒரு பொருளைப் பார்த்தால், உடனே வாங்குவதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, அதன் பெயர், விலை, அது எங்குக் கிடைக்கிறது (ஆன்லைனில் எனில் லிங்க்) போன்ற விவரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, அங்கிருந்து அமைதியாக நகர்ந்துவிடுங்கள். அடுத்த 30 நாட்களுக்குக் காத்திருங்கள். இது உங்கள் பட்ஜெட்டிற்குள் பொருந்துகிறதா? இதை வாங்கினால் சேமிப்பு பாதிக்கப்படுமா.. இதைப் பொருள் வேறு இடத்தில் விலை குறைவாகக் கிடைக்குமா என்பதை ஆய்வு செய்யுங்கள்.

அடுத்து 30 நாட்களுக்குப் பிறகும் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என நீங்கள் யோசித்தால் தளமாக வாங்குங்கள். இந்தச் செயல்முறையைப் பின்பற்றினால் செலவு கணிசமாகக் குறையும். இதன் மூலம் உங்கள் சேமிப்பை நீங்கள் ஈஸியாக அதிகரிக்க முடியும்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/what-is-30-day-rule-easy-hack-to-stop-impulse-spending-save-money-that-will-be-a-game-changer-786373.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo