
Cricket
oi-Nantha Kumar R
மும்பை: டி20 உலககோப்பை பைனலில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹியேகா சர்மாவுடன் மைதானத்தில் கொண்டாடினர். உதட்டு முத்தம் கொடுத்ததோடு, அத்துமீறி நடந்து கொண்டார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஹர்திக் பாண்டியா இந்திய தேசிக்கொடியை அவமதித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலககோப்பை பைனல் போட்டி அகமதாபாத்தி உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 8 ம் தேதி நடந்தது. இதில் இந்தியா – நியூசிலாந்துஅணிகள் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மைதானத்தில் கொண்டாடினர். தங்களின் மனைவி, குடும்பத்தினரை மைதானத்திற்குள் அழைத்து வந்து அவர்கள் குடும்பமாக வெற்றியை கொண்டாடினர்.
காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக்
இந்த வேளையில் ஹர்திக் பாண்ட்யா எல்லை மீறி நடந்து கொண்டார். ஹர்திக் பாண்ட்யா தனது காதலியான மஹியேகா சர்மாவுடன் மைதானத்தில் வலம்வந்தார். இருவரும் கட்டியணைத்து உதட்டு முத்தம் கொடுத்து கொண்டனர். இதுதவிர மைதானத்தில் பல ஆயிரம் பேர் கூடியிருந்தாலும் கூட எதையும் கண்டுக்கொள்ளாமல் ஹர்திக் பாண்ட்யா எல்லை மீறி நடந்து கொண்டார். மைதானத்தில் அமைக்கப்பட்ட போடியத்தில் இருவரும் ஒன்றாக படுத்து கிடந்தனர். இது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
போலீசில் புகார்
இந்த வேளையில் அவர் நம் நாட்டின் தேசியக்கொடியை உடலில் போர்த்தி இருந்தார். ஹர்திக் பாண்ட்யாவின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பினர் அவரை விமர்சனம் செய்ய தொடங்கினர். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான், ஹர்திக் பாண்ட்யா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ஹர்திக் பாண்ட்யா தேசியக்கொடியை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் கூறுவது என்ன?
இதுபற்றி புகாரளித்த வழக்கறிஞர் வாஜித் கான் கூறுகையில், ”நீங்கள் டி20 உலுககோப்பை போட்டியை பார்த்து இருப்பீர்கள். பைனலில் ஹர்திக் பாண்டியா தனது தோழியுடன் வெற்றியை கொண்டாடினார். அப்போது அவர் தனது உடலில் தேசியக்கொடியை போர்த்தி இருந்தார். தேசியக்கொடி சட்டம் 1971 பிரிவு 2ன்படி நாம் தேசியக்கொடிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் தேசியக்கொடியை உடலில் போர்த்தி கொண்டு தோழியுடன் நெருக்கமாக இருந்தார். இது தேசியக்கொடியை அவமதிப்பதாகும்.
புகாரை வாங்க மறுத்த போலீஸ்
இதுதொடர்பாக சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்துள்ளேன். அப்போது போலீசார் சம்பவம் இங்கு நடக்கவில்லை என்று கூறினர். நான் தேசியக்கொடி என்பது நம் நாட்டுக்கான அடையாளம் எனக்கூறி புகாரை அளித்தேன். அவர்கள் புகாரை வாங்கி கொண்டனர். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்றார்.
விரைவில் கைது?
தற்போது புகார் அளிக்கப்பட்ட நிலையில் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். ஒருவேளை வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அடுத்ததாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். ஆனால் இந்த விவகாரம் கைது நடவடிக்கை வரை செல்ல வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/hardik-pandya-insulted-national-flag-lawyer-alleges-and-filed-complaint-in-pune-780629.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
