காமேனி கதையை முடிக்க அனுப்பப்பட்ட ஏவுகணையை.. ஈரானால் தடுக்க முடியாதது ஏன்? இஸ்ரேலின் பவர் இதுதான்! | Israel’s Lethal Precision: How the Blue Sparrow Missile Bypassed Iran’s ‘Blind Spots’ to Strike Its Target.

International

oi-Halley Karthik

டெல் அவிவ்: ஈரான் உச்ச தலைவர் காமேனியை ‘ப்ளூ ஸ்பாரோ’ எனும் ஏவுகணையை வைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் போட்டு தள்ளியது. இப்படி ஒரு ஆபத்து நடக்கும் என்று தெரிந்திருந்தும், அதை ஈரான் முன்கூட்டியே தடுக்காதது ஏன், என்று கேள்வி எழுந்திருக்கிறது.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஈரான் வசம் தடுப்பு ஏவுகணைகள் பெரிய அளவில் இல்லை. தாக்குதல் ஏவுகணைகள் மட்டுமே இருக்கின்றன. இரண்டாவது காரணம், ப்ளூ ஸ்பாரோ ஏவுகணையின் பலம்தான்.

Blue Sparrow

‘ப்ளூ ஸ்பாரோ’ பலம்

முதலில் ஏவுகணையின் பலம் பற்றி பார்ப்போம். ‘ப்ளூ ஸ்பாரோ’ ஒரு வான்வழி பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். பாலிஸ்டிக் என்றால் கண்டம் விட்டு கண்டம் பாயும். நீண்ட தூரம் செல்லும். ‘ப்ளூ ஸ்பாரோ’ இது விண்வெளியின் விளிம்பு வரை பயணித்து, பின்னர் இலக்கை நோக்கி செங்குத்தாகத் தாக்கும் வல்லமை கொண்டது. இதன் அதிவேக செங்குத்து இறக்கம், வழக்கமான வான் பாதுகாப்பு அமைப்புகளால் இதை இடைமறிப்பதைத் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது.

இந்த மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இஸ்ரேலின் ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. 6.51 மீட்டர் நீளமும், சுமார் 1,900 கிலோகிராம் எடையும் கொண்டது.

ஏன் ஆபத்தானது?

F-15 ஈகிள் போன்ற போர் விமானங்கள், எதிரி வான் பகுதிக்கு வெளியே, அதிக உயரத்தில் இருந்து ப்ளூ ஸ்பாரோ ஏவுகணையை ஏவுகின்றன. சுமார் 2,000 கி.மீ தூர்தில் உள்ள இலக்கை கூட, வெறும் 3 மீ துல்லியத்தில் இதனால் தாக்க முடியும். 2000 கி.மீ தூரம் வரை பயணிக்கும் என்பதால், எதிரி நாட்டுக்குள் நுழையாமல் வெளியிலிருந்தே இதனை ஏவ முடியும்.

ஏவப்பட்டதும், ஏவுகணையின் பூஸ்டர் செயல்பட்டு, அதை ஒரு செங்குத்தான பாதையில் மேலே உயர்த்துகிறது. இது வேகமாக ஏறி, பூமி வளிமண்டலத்தைக் கடந்து விண்வெளியின் விளிம்பை அடைகிறது. இப்படி விண்வெளிக்கு ஏவுகணை போவதால், வழக்கமான கண்காணிப்பு நெட்வொர்க்குகளால் கண்காணிக்க முடியாது.

எப்படி தாக்கும்?

ஏவுகணை உயரத்தை அடைந்ததும், இதன் முன் பகுதியில் இருந்து இருந்த குண்டு தனியாக பிரிந்துவிடுகிறது. பின்னர், அது இலக்கை நோக்கி கிட்டத்தட்ட 90 டிகிரி செங்குத்தாக விழுகிறது. குண்டுக்குள் உள்ள சிறிய ராக்கெட்கள், விழும்போது துல்லியமான பாதையில் பயணிக்க உதவுகிறது.

பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் கிடைமட்டமாக நெருங்கும் இலக்குகளைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ப்ளூ ஸ்பாரோ ஒலியின் வேகத்தைவிட பல மடங்கு வேகத்தில் மேலிருந்து செங்குத்தாகக் கீழிறங்குகிறது. இப்படி வருவதால், எதிரி படைகளால் இந்த ஏவுகணையை எப்படி தடுப்பது என்று யோசிக்க கூட டைம் கிடைக்காது. இப்படி வரும் ஏவுகணைகள் 3 மீ துல்லியத்தின் இலக்கை தாக்கும்.

எங்கு சொதப்பியது ஈரான்?

ஈரனிடம் எஸ்-300 வான் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறது. இது, சைடு வாக்கில் வரும் ஏவுகணைகளை மட்டும்தான் தடுக்கும். ப்ளூ ஸ்பாரோ ஏவுகணை செங்குத்தாக 90 டிகிரி கோணத்தில் தாக்குகிறது. இங்குதான் ஈரான் தவறவிட்டிருக்கிறது. அதேபோல ஈரானிடம் இருக்கும் ரேடார் அமைப்புகள் குடை போல செயல்படுகின்றன. இருப்பினும் இந்த குடையில் சில ஓட்டைகள் இருக்கின்றன. இந்த ஓட்டைகளை இஸ்ரேல் சரியாக கண்டுபிடித்து தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/israel-s-lethal-precision-how-the-blue-sparrow-missile-bypassed-iran-s-blind-spots-to-strike-its-779529.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo